பிசாசின் வல்லமை THE POWER OF THE DEVIL 55-10-05 லேன்டெக் உயர்நிலைப்பள்ளி, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடும், நம்பிடுவாய்; நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடும், நம்பிடுவாய். 1. நாம் தொடர்ந்து நின்று கொண்டிருக்கையில், நாம் ஜெபத்துக்காக ஒரு நிமிடம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமா-? எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இன்றிரவு மீண்டும் வந்து, உம்மை பிதா என்று அழைப்பதற்கும், இந்த நாள் முழுவதும் அல்லது மகிமைக்காக எங்களை ஆயத்தம் செய்கிற எங்கள் ஜீவியத்தின் எந்த சமயத்திலும், எங்களுக்கு ஏதாவது தேவை இருக்குமானால், அதைக் கேட்கவும் (நீர் கொடுத்த சிலாக்கியத்திற்காக) உமக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். நாங்கள் எங்கள் தவறுகளை அறிக்கையிட்டு, அவருடைய மன்னிப்புக்காக வேண்டிக் கொள்கிற இப்போதே, உம்முடைய நேச குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் இரத்தமானது அதற்காக பரிகாரம் செய்வதாக. 2. இன்றிரவு மகத்தான பரிசுத்த ஆவியானவர் கூட்டத்திற்குள் வந்து, கூட்டத்தை கட்டுக்குள் எடுத்து, ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் வர வேண்டுமென்றும், அவரே ஆராதனையிலிருந்து மகிமையைப் பெற்றுக் கொண்டு, இழக்கப்பட்டவர்களை இரட்சிக்க வேண்டுமென்றும், நேர் பாதையிலிருந்து விலகிப்போயிருக்கிற ஆடுகள் மீண்டும் ஆட்டுத்தொழுவத்திற்கு திரும்பி வரும்படி அவர்களை அழைக்க வேண்டும் என்றும், வியாதியஸ்தரை சுகப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் உட்காரலாம்.) மாலை வணக்கம், நண்பர்களே. இது... இன்றிரவு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஊழியம் செய்யும் படியாக மீண்டும் இங்கே இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 3. சற்று முன்பு வந்து கொண்டிருந்த போது, சகோதரன் மூர் அவர்கள் வந்து சேர்ந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டது என்னை மிகவும் சிலிர்ப்படையச் செய்தது. அவரைக் கொண்டு இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவரோடு கூட சகோதரன் பிரௌன் அவர்களும், சகோதரன் லைல் அவர்களும் வந்திருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டேன்; ஷிரீவ்போர்ட் வழியாக வந்துள்ள அருமையான மனிதர்கள். மிகவும் அருமையான சில ஜனங்கள் லூயிசியானாவில் உள்ளவர்கள். நீங்கள் எப்போதுமே வரவேற்கப்படுகிறீர்கள் என்பதை அறிவேன். 4. பிறகு, அவர்கள் உள்ளே வருகையில், ஒருவர் என்னை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர் என்னுடைய கரத்தைக் குலுக்கி, ‘சகோதரன் பிரன்ஹாமே, எனக்கு மறந்து விட்டது, அநேக வருடங்களுக்கு முன்பு, என்னுடைய தாயார் காச நோயினால் படுக்கையில் கிடந்து மரித்துக் கொண்டிருந்தார்கள். நீர் அவர்களுக்காக ஜெபித்தீர். அது முதற்கொண்டு அவர்கள் சுகத்தோடு இருந்து வருகிறார்கள்’ என்றார். எனவே நான் அப்படியே... 5. ஒரு விமானத்தை விட்டு வெளியே வரும் போது, யாரோ ஒருவர், ‘ஹலோ, சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, 7 அல்லது 8 வருடங்களுக்கு முன்பு, என்னுடைய அப்பாவுக்கு புற்று நோய் இருந்தது. அவர் சுகமானார்’ என்று கூறினார். மேலும் அநேக வெவ்வேறான காரியங்கள், அப்படியே... இவை அனைத்தும் முடிவடைந்து, தேவனுடைய சிங்காசனத்தில் என்றென்றும் பசுமையாயுள்ள மரத்தின் கீழே நாம் உட்கார்ந்து, அந்த சாட்சிகளைக் கேட்கும் போது, எப்படியிருக்கும் என்று நான் வியப்படைகிறேன். ‘நாம் எவ்விதம் ஜெயங்கொண்டோம் என்னும் வரலாற்றைக் கூறுவோம். போகப் போக நாம் அதை அதிகமாக புரிந்து கொள்வோம்’ என்று அந்தப் பாடல் கூறுகிறது. 6. இப்பொழுது, ஒருக்கால் இன்றிரவு, கர்த்தருக்குச் சித்தமானால் - நாம் வெறுமனே ஒரு இரவில் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கலாம் என்று நான் உங்களுக்கு வாக்குப் பண்ணி இருக்கிறேன். வெறுமனே... வழக்கமாக நம்முடைய கூட்டங்கள், (கூட்டங்களுக்கான) ஒரு தெய்வீக ஒழுங்கின் மூலமாக, அறிவு - ஒரு தெய்வீக அறிவின் வரத்தைக் கொண்டு நடத்தப்படுகின்றன, அல்லது நீங்கள் அதை என்னவாக அழைக்க விரும்பினாலும். ஒரு சில நாட்களுக்கு முன்பு, நான் வெளியே காட்டில் ஜெபித்துக் கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசினதைக் குறித்து நான் இங்கே சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். அவர், ‘நான் என்ன செய்ய வேண்டும் என்று உன்னிடம் கூறினதை நீ இன்னும் செய்யவில்லை. வியாதியஸ்தருக்காக ஜெபி’ என்றார். சொன்னார்... 7. எனவே, நான், ஒருக்கால் இன்றிரவு நாம் அதைச் செய்யலாம். இன்றிரவு ஜெப அட்டைகளைக் கொடுக்க வேண்டாமென்று நான் இன்று என்னுடைய மகனிடம் கூறினேன். எப்படியும், கர்த்தர் ஒத்தாசை செய்வாரானால், நாம் வெறுமனே வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம். அவர் என்ன செய்யப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. அது அற்புதமான காரியமாக இருக்கிறது. நாம் எதிர்பார்ப்புகளோடு உட்கார்ந்திருக்கிறோம். அவர் என்ன செய்வார் என்பது நமக்குத் தெரியாது. மேலும் இப்பொழுது, நாளை இரவு, அதன் பிறகு... வார நாட்கள் வேகமாக கடந்து போகிறது என்பது உங்களுக்குத் தெரியும், இல்லையா-? இது புதன் கிழமை இரவு என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 8. எனவே இப்பொழுது, நாம் வெறுமனே தேவனுடைய வார்த்தையில் ஒரு சிறு பகுதியை வாசித்து விட்டு, பிறகு நேராக இந்தப் பாகத்தின் சிலிர்ப்பூட்டுகிற ஆராதனைக்கு உள்ளாகச் சென்று, வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தப் போகிறோம். எனவே, நாங்கள் உங்களை தாமதமாகப் பிடித்து வைத்திருக்க மாட்டோம். 9. சென்ற சாயங்கால நேரத்தில், நாங்கள் முழுவதுமாக பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் இருந்தோம், மேலும் நாங்கள் ஏறக்குறைய 10:15 மணி வரைக்கும் இங்கே இருந்தோம் என்று நம்புகிறோம். நான்... ஜனங்கள் திரும்ப வருவதென்பது, குறிப்பாக இவ்விதமாக மழை பொழியும் ஒரு இரவில் ஜனங்கள் திரும்பவும் வருவதென்பது அற்புதமும் ஆச்சரியமுமான ஒரு கிருபையாகவே உள்ளது. ஆனால், நீங்கள் மிகவும் அருமையானவர்கள், நாங்கள் உங்களை மிகவும் பாராட்டுகிறோம். 10. எனவே, நாங்கள் தேவனுடைய வார்த்தையை வாசித்து, சிறிது நேரம் இயேசுவைக் குறித்து பேசும் போது, நீங்கள் விரும்பினால், கொஞ்ச நேரம் எங்களோடு சகித்துக் கொள்ளுங்கள். அதற்காகத் தான் நாம் இங்கே இருக்கிறோம், அவரை உயர்த்துவதற்காக. நீங்கள் அவரை நேசித்து, அவரை ஆராதிக்க வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கமாக உள்ளது. அவ்விதமாக அவரை ஆராதிப்பதற்காகத் தான் நாம் ஒன்றாகக் கூடி வந்திருக்கிறோம். 11. இப்பொழுது, யாத்திராகம புத்தகத்திலிருந்து ஒரு வேத பகுதியை வாசிக்க விரும்புகிறேன், ஒருக்கால் அடுத்த இரவும் அல்லது அடுத்த இரண்டு இரவுகளும் இந்த அற்புதமான புத்தகத்தில் இருந்து பேசலாம். (யாத்திராகமம் 2:1,2) லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். கர்த்தர் தம்முடைய வார்த்தையின் வாசிப்பிற்கு தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 12. நான் எப்போதுமே அவருடைய வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன், ஏனென்றால் ஒருக்கால் நான் கூறுவது தவறாக இருக்கலாம், இது நிச்சயமாகத் தவறிப் போகலாம். ஆனால், நான் வெறுமனே இதிலிருந்து ஒரு வசனத்தை வாசித்தால், ஜனங்கள் நோக்கமின்றி இங்கே வந்திருக்கவில்லை என்பதை அறிவேன், ஏனென்றால் இது தேவனுடைய வார்த்தையாக உள்ளது, மேலும் இது ஒரு போதும் தவறிப் போகாது. அது எப்போதுமே சரியாகத் தான் இருக்கும். காலங்கள் ஒருக்கால் மாறலாம், ஜனங்கள் ஒருக்கால் மாறலாம், ஆனால் தேவனுடைய வார்த்தையானது ஒரு போதும் மாறாது. நித்தியமானது எவ்வளவு மாறாமால் இருக்கிறதோ அவ்வளவு அதுவும் மாறாததாயுள்ளது. இப்பொழுது, இந்த யாத்திராகம புத்தகம் பழைய ஏற்பாட்டிலேயே எனக்குப் பிடித்தமான புத்தகங்களில் ஒன்றாக உள்ளது. ‘யாத்திராகமம்’ என்ற அதே வார்த்தைக்கு. யாத்திராகமம் என்பதற்கு ‘வெளியே அழைக்கப்பட்டவர்கள்’ என்று அர்த்தம். வேறு விதமாகக் கூறினால், அது தானே சபையையே குறிக்கிறது: யாத்திராகமம். தேவனுடைய ஜனங்கள் எகிப்தில் இருந்த போது, அவர்கள் அழைக்கப்பட்டனர். மேலும் அப்போது அவர்கள் வெளியே அழைக்கப்பட்ட போது, அவர்கள் தேவனுடைய சபையாக இருந்தனர், ஏனென்றால் சபை என்பதற்கு ‘வெளியே அழைக்கப்பட்டவர்கள், பிரித்தெடுக்கப் பட்டவர்கள்’ என்று அர்த்தம். 13. நீங்கள் உண்மையான சபையில் இருக்கும் போதும் அவ்விதமாகத் தான் நீங்கள் - நீங்கள் அதை அறிகிறீர்கள், நீங்கள் தேவனால் வெளியே அழைக்கப்பட்டு, உலகத்தின் காரியங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, நீங்கள் கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அன்பு கூருகிறீர்கள், அப்போது நீங்கள் தேவனுடைய சபையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்கிறீர்கள். இப்பொழுது, அவர்கள் உங்கள் மேல் பொருத்தி விடுகிற, மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தேகோஸ்தேயினர் போன்ற நாய்களுக்கு அணியும் வித்தியாசமான முகவரிச் சீட்டுகளைக் (dog tags) அவர்கள் ஒருக்கால் கொண்டிருக்கலாம்; ஆனால் அவைகள் வெறும் நாய்களுக்கான முகவரிச் சீட்டுகள் தான், நீங்கள் பாருங்கள்-? 14. ஆனால் எவ்வகையிலும், நான் அவ்விதமாக அதைக் கூறக் கருதவில்லை. இப்பொழுது, நான் அதைக் குறித்து எண்ணிப் பார்க்கவில்லை. நீங்கள் அணிந்து கொள்ளும், குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்கள் என்ற அந்த அடையாளக் குறியைத் (brand) தான் நான் – நான் குறிப்பிட்டேன், (உங்களுக்குப் புரிகிறதா-?), இல்லையெனில். அதாவது... அவர்கள், ‘நீ மெதொடிஸ்டு சபையைச் சேர்ந்தவன்’ என்ற ஒரு பெயரைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் உண்மையாகவே ஒரே ஒரு சபை தான் உண்டு, அது மறுபடியும் பிறந்தவர்களைக் கொண்ட சபை. அது மட்டுமே சபையாகும். நீங்கள் - நீங்கள் ஒரு போதும் தேவனுடைய சபையைச் சேர்ந்து கொள்வதில்லை. அதைச் சேர்ந்து கொள்ள எந்த வழியுமே கிடையாது. நீங்கள் தேவனுடைய சபையில் பிறக்கிறீர்கள். 15. இயேசு, ‘ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவனால் தேவனுடைய இராஜ்யத்தைப் புரிந்து கொள்ள முடியாது’ என்றார். (யோவான் 3:3). நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரையில் உங்களால் அதைப் புரிந்து கொள்ள எந்த வழியுமே கிடையாது, அதன் பிறகு தேவன் தம்மைத் தாமே உங்களுக்கு வெளிப்படுத்துகிறார், அப்போது நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்கிறீர்கள், ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக மாத்திரமே அன்றி ஒருவனும் இயேசுவைக் கிறிஸ்து என்று அழைக்கக் முடியாது, (1 கொரிந்தியர் 12:3). புரிகிறதா-? 16. இயேசுவே கிறிஸ்து என்று நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ளும் ஒரே வழி என்னவெனில், அவர் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு என்று பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் அதைத் தனிப்பட்ட முறையில் சாட்சி பகரும் போது மாத்திரமே. அவர் எம்மாதிரியான அடையாளங்களைச் செய்தார் என்பதோ, அவர் எம்மாதிரியான அற்புதங்களைச் செய்தார் என்பதோ காரியமில்லை, நீங்கள் தேவனோடு தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டிருக்கும் வரையில் நீங்கள் அதை ஒரு போதும் அறிய மாட்டீர்கள். 17. நீங்கள், ‘நல்லது, வேதாகமம் அவ்வாறு கூறுவதன் நிமித்தமாக நான் அதை விசுவாசிக்கிறேன்’ என்று கூறலாம். நல்லது, அது நல்லது தான். வேதாகமம் உண்மை தான். அதற்கு அது தெரியும். ‘நல்லது, பிரசங்கியார் அவ்வாறு கூறினார்’ என்று நீங்கள் கூறலாம். ஒரு வேளை அவருக்கு அது தெரிகிறது. ‘அம்மா அவ்வாறு கூறினார்கள்’ என்று கூறலாம். அம்மாவுக்கும் அது தெரிகிறது. ஆனால் அதைக் குறித்து உனக்கு என்ன தெரியும்-? பரிசுத்த ஆவியானவர் மூலமாக, அது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தப்படும் வரை, நீங்கள் ஒரு போதும் அதை அறிந்து கொள்ள மாட்டீர்கள். பிறகு, அதை ஏற்றுக் கொள்வதன் மூலமாக, நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாகி, இரண்டாம் முறையாகப் பிறக்கிறீர்கள். 18. இப்பொழுது, உங்களால் ஜீவிக்க முடியாது மேலும் - மேலும் இரண்டு முறை; நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமானால், நீங்கள் ஒரு முறை மரித்தாக வேண்டும். எனவே நீங்கள் உங்களுக்கு மரித்து, பரிசுத்த ஆவியானவரால் புதிதாகப் பிறக்கும் போது, அதற்கு மேலும் தேவனுடைய வார்த்தையை அறிவுத்திறனைக் கொண்டு தர்க்கம் செய்வதில்லை. நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள்... அது எதற்காக சொல்லப்படுகிறது என்பதை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள், அது அதைத் தீர்த்து வைக்கிறது. அது... தேவன் அதைக் கூறினார், அது அதை நிரூபிக்கிறது. 19. எனவே இன்று இந்த அற்புதமான புத்தகமானது அதைப் போன்ற ஏதோவொன்று தான். இன்று சபை தாமே ஒரு மகத்தான யாத்திரையில் இருக்கிறது என்று விசுவாசிக்கிறேன். (நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-?) ஒரு மகத்தான வேறு பிரிக்கும் நேரம். தேவன் தம்முடைய ஜனங்களை அழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் அதை கடைசி நாட்களில் செய்வார் என்று வாக்குத்தத்தம் பண்ணி உள்ளார். அவர் அவர்களை வேறு பிரித்து, தமது ஜனங்களை பிரித்து வைக்கிறார் (segregate). 20. சமீபத்தில், எங்கோ ஓரிடத்தில், தீர்க்கதரிசி, ‘சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும் (சகரியா 14:7)’ என்று கூறிய வசனத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். வெளிச்சத்திற்கு இடைப்பட்ட நேரம் கிடையாது. அங்கே... காலையில் வெளிச்சமுண்டாகும், மேலும் சாயங் காலத்தில் வெளிச்சமுண்டாகும். இரவுமல்லாமல் பகலுமல்லாமல் இருந்த ஒரு நாள் அங்கே இருந்தது, ஒரு விதமான தெளிவற்றதும், மங்கலாக இருந்ததுமான ஒரு நாள்... இன்றைய நாளைப் போன்ற ஏதோவொன்று. நாம் ஏறக்குறைய அந்த விதமான ஒரு நாளில் தான் வாழ்ந்து வருகிறோம். பூகோள ரீதியாக, நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்களானால், சூரியன் கிழக்கில் உதித்து, மேற்கில் அஸ்தமிக்கிறது. நாகரீகமானது கிழக்கில் தோன்றி, எப்போதுமே மேற்கு நோக்கி நகருகிறது. மேலும் இப்பொழுது, சபையானது கிழக்கில் பெந்தெகோஸ்தே நாளில் கிழக்கத்திய ஜனங்களுக்குத் தோன்றினது. 21. இப்பொழுது, அது மேற்கு நோக்கி தேசங்களினூடாகப் பிரயாணம் செய்து, சுவிசேஷமானது கொண்டு வரப்பட்டிருக்கிற நேரத்தில், அது மிகச்சரியாக... நாம், ‘வெளிச்சத்தைப் பிரகாசியும்’ என்று கூறியிருந்தோம், ஆனால் நாம் அப்படியே வேதாகம நாட்களில் போதிக்கப்பட்டிருந்த அந்த வெளிச்சத்தின் எதிர்விளைவாக (reaction) இருக்கிறோம். ஆனால் நாம் உண்மையாகவே அங்கே முற்காலத்தில் அவர்களுக்கிருந்த அந்த வெளிச்சத்தைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ‘சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்’ என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணி இருக்கிறார். 22. இயேசுவே தேவ குமாரன் என்பதை அறிவதற்கு போதுமான வெளிச்சத்தை நாம் கொண்டிருந்தோம். நாம் சரியான விதமாக ஜீவித்தாக வேண்டும் என்பதை அறிவதற்கு போதுமான வெளிச்சத்தை நாம் கொண்டிருந்தோம். ஆனால், அவர் எப்போதுமே ஒவ்வொரு காலத்திலும் கொண்டிருக்கிறபடி, அவருடைய அடையாளங்களோடும், அற்புதங்களோடும், அதிசயங்களோடும் உள்ள கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமையின் வெளிச்சமானது... எந்தக் காலத்திலும் தேவன் தம்மைத்தாமே வெளிப்படுத்தும் போது, அங்கே எப்போதுமே அடையாளங்களும் அற்புதங்களும் இருந்தது. 23. எனவே, கிறிஸ்துவுக்குப் பின் 33 (AD 33)-வது வருஷத்தில், கிழக்கத்திய ஜனங்கள் மேல் பிரகாசித்த அதே வெளிச்சம் தான் 1955, 1956-ம் வருஷத்தில் மேற்கத்திய ஜனங்கள் மேலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது அப்போதிருந்த அதே பரிசுத்தாவி, அதே விளை பலன்கள், அதே வல்லமை, அதே இயேசு, அதே ஜனங்கள், அதே விதமான ஜனங்கள் என்பதைக் காண்பிக்கிறது. எனவே சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகியிருக்கிறது. யாத்திராகமம்: தேவன் தமது ஜனங்களை வெளியே அழைத்து, ஒரு வித்தியாசத்தை உண்டாக்கி, தமது ஜனங்கள் மத்தியில் ஒரு வித்தியாசத்தை வைக்கிறார்... இப்பொழுது, இந்த வாரத்தில், மீட்பு என்பதின் பேரில் நாம் அதிகமாக பேச விரும்புகிறோம். நம்முடைய சுகமாகுதலும் தேவனுடைய மீட்பின் திட்டத்தில் உள்ளடங்கி இருந்தது. இப்பொழுது, நாம் அதை வேத வாக்கியத்தின் மூலம் நிரூபிக்கக் கூடுமானால், அது அதை தீர்த்து வைக்க வேண்டும். 24. இப்பொழுது, யாத்திராகம புத்தகமானது முழுவதுமாக ஒரு மீட்பின் புத்தகமாகும். மீட்கப்பட்டது. மீட்கப்பட்டது என்பதற்கு ‘அதனுடைய சரியான ஸ்தானத்தில் பொருத்துவ தற்காக திரும்ப கொண்டு வரப்படுதல்’ என்பதைக் குறிக்கிறது. எதையாவது மீட்பது என்பது, அதை விட்டுப் போயிருந்த அல்லது அதனுடைய இயற்கையான ஸ்தானத்தை விட்டு, அதனுடைய உண்மையான ஸ்தானத்தை விட்டுப் போயிருந்த ஏதோவொன்றை மீட்டுக் கொண்டு வருவது, அதனுடைய இடத்திற்குத் திரும்பக் கொண்டு வரப்படுவது தான். 25. இவ்வுலகத்திலிருக்கிற மனிதர்கள் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக்க வேண்டியவர்கள். அவர்கள் பாவத்தில் அலைந்து திரிகிற போது, அவர்கள் தங்களுடைய மூலமுதலான நிலையை விட்டு வெளியே இருக்கின்றனர், இயேசுவின் இரத்தத்தினூடாக பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் திரும்பவும் தேவனுடைய குமாரர்களும் குமாரத்தி களுமாக இருக்கும்படியாக, அவர்களை சரியான நிலைக்குத் திரும்பவும் மீட்டுக் கொண்டு வருகிறார். ஆமென். (ஒலிநாடாவில் காலியிடம் – ஆசிரியர்.) மீட்பு: திரும்பக் கொண்டு வரப்படுதல். 26. ஒரு சமயம் ஒரு மனிதர் என்னிடம், ‘சகோதரன் பிரன்ஹாமே, மீட்கப்படுதல் என்பது, பிசாசு என்னை அடகு கடையில் வைத்தான், கர்த்தராகிய இயேசுவோ என்னை விடுதலை பண்ணினார்’ என்றார். அது மிகவும் அருமையானதும், சரியானதுமாய் கூட இருக்கிறது என்று நினைத்தேன். பிசாசு உங்களை அடகுக் கடையில் வைத்தான், ஆனால் இயேசுவோ உங்களிடம் வந்து உங்களை விடுதலை பண்ணினார். 27. எதையாவது மீட்டெடுக்கும் போது, எப்போதுமே மீட்பின் கிரயம் (மீட்புப் பணம் - ransom) செலுத்தியாக வேண்டும். இயேசுவே நம்முடைய மீட்பின் கிரயம். தேவன் அவரை அனுப்பி, அவரை பாவ மாம்சத்தின் சாயலாக்கினார், அவர் இம்மானுவேலாய் இருந்த போதிலும், அவருக்குள் இருந்த இரத்தத்தை சிருஷ்டித்து, நாம் ஆதியிலிருந்தது போல அவரோடு நடக்குபடி, நம்மை தேவனிடத்தில் திரும்ப ஒப்புரவாக்கி மீட்கும்படியாக, மீட்பின் கிரயமாக தம்முடைய இரத்தத்தை அவர் கொடுத்தார். மனிதன்... ஆதியிலே தன்னுடைய தேவைகளைத் தானே சந்திக்க வேண்டியதாய் இருக்கவில்லை, அப்போது அவனுக்குத் தேவையான யாவற்றையும் தேவனே அருளினார். ஆனால் அவன் அசட்டை செய்பவனாகவும், தகுதி அற்றவனாகவும், தவறான காரியங்களைச் செய்பவனாகவும் இருந்த பிற்பாடு, பாவம் தேவன் இடமிருந்து அவனை வேறு பிரித்தது, அதன் பிறகு அவன் தன்னுடைய தேவைகளைத் தானே சந்திக்க வேண்டியவனாயிருந்தான். மேலும் இப்பொழுது, ஒரு அன்பு தகப்பனின் கரங்களின் அரவணைப்பிற்குள் இம்மனிதனை திரும்பவும் மீட்கும்படி இயேசு வந்தார். மீட்பு என்பது திரும்பக் கொண்டு வரப்படுதல், ஒன்றை பழைய இடத்திலேயே மறுபடியும் வைப்பது, ஸ்தானத்தில் பொருத்துதல். 28. மேலும் எப்படி... வெளித்தோற்றத்தில் ஒவ்வொரு இயற்கையான காரியத்தின் அஸ்திபாரமும் விழுந்து கொண்டிருக்கிற, நாம் ஜீவித்துக் கொண்டிருக்கும் இந்நாளில், அதை அறிவதென்பது, இன்றிரவு என்னவொரு அற்புதமான சிந்தனையாக இது இருக்கிறது. நமக்கு இரட்சிப்பின் நிலையான பாறை உண்டு, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்து இருக்கிறோம். தேவன் பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயங்களில் அதிகமாக ஊற்றியிருக்கிற இந்த நித்திய ஆசீர்வாதங்களில் பங்கு கொண்டு வருகிற மனிதனுடைய இருதயத்தில் அருளுப்படுகிற சந்தோஷம் என்னவொரு - என்னவொரு சந்தோஷமாய் உள்ளது. என்னவொரு காட்சி. இது என்னவொரு அன்பான ஆறுதலாய் உள்ளது. 29. இன்றிரவு என்னுடைய சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் கூறுகிறேன், எல்லா பணத்தையும் ஒரே நேரத்தில் வைத்திருக்கிற உலகத்தையே நான் கொண்டிருந்தாலும்... தற்செயலாக யாரோ ஒருவர் பத்து இலட்சம் டாலர்கள் காசோலையோடு ஒரு கடிதம் அனுப்பினார், எனக்கு இன்று அது கிடைத்தது, பரலோக வங்கியில் (Bank of Heaven) பத்து இலட்சம் டாலர்கள் காசோலை. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) எல்லாவற்றிற்கும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) ... சரி. அதற்குக் கீழே இயேசுவின் பெயர் கையொப்பம் இடப்பட்டிருந்தால், நான் - நான் அதைக் குறித்து மிகவும் நல்ல விதமாய் உணருவேன் என்பதில் நிச்சயம் உடையவனாயிருந்தேன். 30. ஆமாம், அந்த அன்பானவர் அதைப் பேசுவதைக் குறித்து எண்ணிப் பார்க்கும் போது, ஓ, அதில் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட மிகவும் அருமையான ஒரு சிறு கடிதம் இருந்தது... ஆனால் அந்தக் காசோலையை உண்மையிலேயே பெற்றிருக்கிறேன் என்பதை சற்று ஞாபகம் கொள்ளுங்கள், மேலும் இங்கே இருக்கும் ஒவ்வொருவரும் அதே காரியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். 31. அந்தக் காசோலையைப் பணமாக்க நான் பயப்படுவதில்லை. ஆமென். கிறிஸ்து அதில் கையொப்பமிட்டுள்ளார், இங்கிருந்து மகிமை வரையுள்ள நம்முடைய பிரயாணம் முழுவதும் நமக்குத் தேவையாயிருக்கிற எதற்காகவும் அது திருப்திகரமானதாக இருக்கும். தேவன் அதை நம் எல்லாருக்கும் இலவசமாகக் கொடுத்திருக்கிறார். அவசியமான ஒரே காரியம் என்னவெனில், அந்தக் காசோலையைப் பணமாக்க பயப்படக் கூடாது என்பது தான். 32. இப்பொழுது, மீட்கப்படுதலின் ஒழுங்கில், வியாதியும் தொடர்புடையதாக இருக்க வேண்டும், வியாதியானது பாவத்தின் ஒரு விளைவாக இருக்கிறது. இப்பொழுது, பாவமானது... சில சமயங்களில் வியாதியானது உங்களுடைய பாவத்தின் நேரடியான விளைவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்கிருக்கிற வியாதியானது மறைமுகமான விளைவாக இருக்கலாம். நீங்கள் அதை உங்களுடைய பெற்றோர்களின் வியாதியிலிருந்தோ- பாவத்தினாலோ அல்லது உங்களுடைய முன்னோர்களின் பாவத்தினாலோ பெற்றிருக்கலாம். ஒவ்வொரு சந்ததியும் பெலவீனர்களாகவும், புத்திசாலிகளாகவும் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள், ஏனென்றால் நாம் தலைமுறையினரிடமிருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களையும், வியாதிகளையும், முன்னோர்கள் இடமிருந்து தொடர்ந்து இளம் தலை முறைகளுக்கு கடந்து வரும் சரீரத்தின் நோய்களையும் பெற்றுக் கொள்கிறோம். 33. ஒரு மனிதன் - மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு சமயத்தில், அவன் ஏறக்குறைய 1000 வருடங்கள் ஜீவித்தான். அடுத்த முறை அவன் கீழ்நிலைக்கு வந்தான், அவன் தன் நாட்களை குறுகிப் போகப் பண்ணினான், தொடர்ந்து அவனுடைய நாட்களை குறுகிப் போகப் பண்ணி, தொடர்ந்து சராசரி வாழ்நாளைக் கொண்டிருக்கிறான், இப்பொழுது ஏறத்தாழ சுமார் 40, 45 வயது வாழ்நாளைக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன். பாருங்கள், நாம் தொடர்ந்து எல்லா நேரமும் பலவீனர்களாக ஆகிக் கொண்டே இருக்கிறோம், ஆனால் எல்லா நேரமும் புத்திசாலிகளாகவும் ஆகிறோம். தேவனுடைய வார்த்தை கூறினது அப்படியே நிறைவேறுகிறது. 34. இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலை ஒரு நிவாரணமாக (cure) பிரசங்கிக்காமல் இன்றிரவு இங்கே இருக்கும் என்னுடைய சகோதரர்களே, அது வியாதிக்கான தேவனுடைய நிவாரணமாக உள்ளது, தெய்வீக சுகமளித்தலை பொருத்தாமல், நீங்கள் இரட்சிப்பை அதனோடு எவ்வாறு தொடர்புடையதாகப் பொருத்த முடிந்தது என்று வியப்படைகிறேன். நமக்கு வியாதி எதுவும் இல்லாததிற்கு முன்பு, நாம் ஒரு போதும் பாவம் எதையும் கொண்டு இருக்கவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஆனால் பாவமானது விளைவாக வந்தது அல்லது - அல்லது, வியாதியானது பாவத்தின் ஒரு விளைவாக வந்தது என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, அப்படியானால், வியாதியானது பாவத்தின் ஒரு தன்மையாக இருக்கிறது. அதைத் தான் பாவம் பிறப்பித்தது – அது தன்மையாக இருந்தது. அது ஆப்பிள் பழங்களைப் பிறப்பிக்கும் மரத்தைப் போன்று; அது அந்த மரத்தின் தன்மையாக உள்ளது. 35. இப்பொழுது, வியாதியானது - சில ஜனங்கள் வருத்தம், சோர்வு, கோபம், பகைமை எண்ணம், பொறாமை, சச்சரவு போன்ற பாவத்தின் தன்மைகள் எல்லாவற்றையும் தனித் தனியாகப் பிரிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அந்த ஒவ்வொரு காரியத்திற்கும் தனித்தனியான பாவ நிவிர்த்தி பண்ண வேண்டியதில்லை. ஒரே பாவநிவிர்த்தியே அவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது. 36. உதாரணமாக, நான் அடிக்கடி கூறுகிறபடி, இங்கே இந்த மேடையின் மேல் ஒரு பெரிய கரடி, அல்லது ஒரு சிங்கம் போன்ற பெரிய மிருகம் இருந்து, அதனுடைய கூரிய நகத்தைக் கொண்டு என்னுடைய பக்கவாட்டுப் பகுதியைக் கிழித்துப் போட்டால், அதனுடைய கூரிய நகத்தை வெட்டக்கூடிய ஏதோவொரு விதமான கத்தி ஒன்றை கண்டு பிடிக்க முயற்சி செய்வது எனக்கு அவசியமில்லை. நான் அப்படியே அதனுடைய தலையில் அடித்தால், அது அப்படியே அதனுடைய கூரிய நகத்தையும் மற்றும் எல்லாவற்றையுமே கொன்று போடும். நான் அதனுடைய தலையைக் கொன்று, அந்த மிருகத்தைக் கொன்று போட்டிருக்கும் வரை அந்த முழு காரியமும் பொறுப்பெடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. 37. நல்லது, பாவத்தின் ஒவ்வொரு தன்மைகளின் தலையானது பாவமேயாகும். இயேசு வந்து கல்வாரியில் பாவத்தோடு போராடின போது, அவர் பாவத்தைக் கொன்று போட்டார். அதனோடு போகிற ஒவ்வொரு தன்மையையும் அவர் கொன்று போட்டார் ஆமென். மேலும் அவர் நம்மை முழுவதுமாக தேவனிடம் திரும்பவும் மீட்டுக் கொண்டார். இன்று நாம் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். பரிபூரண மீட்பராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக பரிபூரணமாக மீட்கப்பட்டோம். ஆமென். ஓ-! அதைக் குறித்து சிந்திப்பதே என்னைக் களிகூரச் செய்கிறது. 38. இப்பொழுது, நாம் அதை முழுமையாகப் பெற்றுக் கொள்ளவில்லை. அது உண்மை. ஆனால் நாம் இரட்சிப்பின் அட்சாரத்தைக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் அட்சாரம் உள்ளது. அங்கே... இப்பொழுது, நமக்கு சோதனைகள் முடிந்து விடவில்லை. நாம் பாவத்திற்கு அப்பாற் பட்டவர்களுமல்ல. ஆனால், இயேசு ஒவ்வொரு சோதனையிலும் நமக்கு உதவி செய்வார். மேலும் இப்பொழுது, நான் தவறு செய்யும் போது, நான் மனந்திரும்ப ஆயத்தமாயிருக்கிறேன். தேவனோடு சரியாக ஜீவிக்க வாஞ்சிக்கும் வேறு யாருமே அவ்வாறு தான் செய்வார்கள். நீங்கள் தவறு செய்ய விரும்புவதில்லை, ஆனால் சாத்தான் ஏதோவொரு இடத்தில் உங்களை கவிழ்த்துப் போடும் போது, அங்கே எனக்காக ஒரு பாவநிவிர்த்தி (atonement) காத்துக் கொண்டிருக்கிற காரணத்தினால், நான் என்னுடைய தவறை அறிக்கை செய்தால், தேவன் அதை மன்னிக்க நீதியுள்ளவராய் இருக்கிறார். 39. நீங்கள் வியாதிப்படும் போதும், அதே காரியம் தான். அது வியாதியிலிருந்து உங்களை விலக்கி வைக்க கையொப்பம் மூலம் உத்தரவாதம் கொடுக்கவில்லை, ஆனால் ஒவ்வொரு தடவையும் அந்த வியாதியிலிருந்து உங்களை விடுவிக்க தேவன் சித்தமுள்ளவராய் இருக்கிறார். புரிகிறதா-? நீங்கள் வியாதிப்படும் ஒவ்வொரு நேரமும், நீங்கள் தேவனிடம் சென்று, அவரிடம் கேளுங்கள், அவர் உங்களை விடுதலையாக்க சித்தமுள்ளவராயிருக்கிறார், ஏனென்றால் அங்கே ஒரு பரிகாரம் (atonement) உள்ளது. அது அந்த பரிகாரத்திலுள்ள உங்கள் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது, அது தான் உங்கள் மீட்பு. வருங்காலத்தில் கிடைக்கப் போவதின் பேரிலான உறுதிப்பணத்தைக் (முன்பணத்தைக்) (earnest money) கொண்டு, நமக்கிருக்கிற இந்த சந்தோஷத்தை நாம் அறிவோமானால், காப்பீட்டின் (பாலிஸியின்) முழு பயனையும் நாம் பெறும் போது, அது எப்படி இருக்கும்-? அது என்னவாக இருக்கும்-? 40. என்னே-! பரிசுத்த ஆவி ஜனங்கள் மேல் வரும் போது, அவர்கள் எவ்வாறு சத்தமிடுவது என்றும், எவ்வாறு அழுவது என்றும், எவ்வாறு நடந்து கொள்வது என்றும் சில ஜனங்கள் கூறுகிறார்கள். நாம் மகிமைக்கு போய் சேரும் போது, அது எவ்வாறு இருக்கும் என்று நான் உண்மையாகவே வியக்கிறேன், என்ன மாதிரியான ஒரு... அது... என்பதில் ஆச்சரியமில்லை. ‘அவர்கள் தங்களுடைய கரங்களில் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு, ஓசன்னா, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்திருக்கிற அவருக்கே மகிமை. ஓசன்னா என்று பாடல்களைப் பாடினார்கள்’ என்று அவர்கள் கூறினார்கள். குருத்தோலைகளை அசைத்தவாறு பாடிக் கொண்டிருக்கிறார்கள்-! அது அற்புதமான நேரமாக இருக்கும். சில சமயங்களில், வெறுமனே அந்தத் தன்மைகளே, நான் உணருவது போன்று, என்னை உணரும்படி செய்யுமானால், அது எப்படியிருக்கப் போகிறது-? அதற்கு உட்படுவதற்கு நான் ஒரு வித்தியாசமான சரீரத்தைக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். ஆனால், அது ஒரு நிச்சயமான காரியம். ஒரு சோதனை வருவதை நான் அறிந்து, என்னுடைய அடைக்கலமாகிய அவரிடம் நான் ஓடிப் போகும் போது, தேவன் அந்த சோதனையிலிருந்து என்னை விடுவித்து, என்னை விடுதலையாக்குகிறார், என்னுடைய இருதயமோ களிகூருகிறது, மகிமையின் மணிகள் ஒலிக்கின்றன; நான் பின்னால் நோக்கிப் பார்த்து, ‘ஓ, தேவனே, நீர் அதை எவ்வாறு செய்தீர்-?’ என்று எண்ணுகிறேன். 41. நான் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறேன்-! உங்களுக்குத் தெரியும், நீங்கள்... நீங்கள் ஏதோவொன்றின் பேரில் உண்மையாகவே மோசமாக சோதிக்கப்பட்டு, நீங்கள் இயேசுவை உங்கள் அடைக்கலமாக்கி, உங்கள் கண்களை மூடிக் கொண்டு, சரியாக அதன் பக்கமாக கடந்து போவீர்களானால், நீங்கள் எப்பொழுதும் கடந்து சென்ற அனுபத்திலேயே இனிமையான அனுபவமாய் அது இருக்கும். 42. (நியாயாதிபதிகள் 14:5-9) ஒரு முறை ஒரு சிங்கம் சிம்சோனைக் கொல்லும்படி ஓடிவந்த போது, அவன் அந்த சிங்கத்தைக் கொன்று போட்டான். பரிசுத்த ஆவி அவன் மேல் வந்த போது, ஏன், அவன் அதைக் கொன்று போட்டான், அவன் ஒரு ஆட்டுக்குட்டியையோ அல்லது ஒரு மிருகத்தையோ கொன்று போடுவது போல அந்த சிங்கத்தைக் கொன்று போட்டான். அப்படி இருக்க, அவன் ஒரு நாள் அங்கே கிடந்த சிங்கத்தின் உடலருகே கடந்து போன போது, அந்த சிங்கத்தின் உடலமைப்புக்குள்ளே சில தேனீக்கள் தேனடைக் கட்டியிருந்தன, அவன் அதைப் புசித்து விட்டு, ‘தான் எப்பொழுதும் புசித்ததிலேயே அது இனிமையான தேனாக இருந்ததாகக்’ கூறினான். அவனைக் கொன்று போடவிருந்த அதே காரியத்தைக் அவன் கடந்து போன போது, அதன் உடலைக் கண்டு, அதிலிருந்து தேனைப் புசித்து அனுபவித்து மகிழ்ந்தான். அவ்விதமாகவே இப்பொழுதும் உள்ளது. ஆமென். 43. நான் ஒரு காலத்தில் நேசித்த அந்த பழைய ஜீவியத்தை நான் கண்டு, இப்பொழுது அது முழு நடுஇரவைப் போன்று மரித்திருப்பதைக் காணும் போது, நான் என் கரங்களை உயர்த்தி, கர்த்தரைத் துதித்து, என்னுடைய முழு ஜீவியத்திலும் எப்பொழுதும் புசித்ததிலேயே இனிமையான தேனை என்னால் புசிக்க முடிகிறது என்று நான் உங்களிடம் கூறுகிறேன். ‘அது சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாய் இருக்கிற சந்தோஷமாயிருக்கிறது-!’ (1 பேதுரு 1:8). நான் அருகே சென்று அங்கே நோக்கிப் பார்த்து, சிறிது நேரத்திற்கு முன்பு அந்த வாலிபர் கூறினதைப் போன்றோ, மற்ற அநேகரும் கூறுவதைப் போன்று, ‘சகோதரன் பிரன்ஹாமே, என்னுடைய தாயார் காசநோயினால் மரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு சக்கர நாற்காலியில் இருந்தார்கள். இந்த சிறிய நபர் இந்தவிதமாகவும் அந்த விதமாகவும் இருந்தார். இப்பொழுது, நீர் கர்த்தராகிய இயேசுவிடம் வேண்டிக் கொண்டீர், அவர் அவர்களுக்கு சுகத்தைக் கொடுத்தார்’ என்று கூறுகிறார்கள் என்பதைக் காண்கிறேன். நான் உங்களுக்குக் கூறுகிறேன், அது அப்படியே உங்கள் இருதயத்தை உற்சாகமடையும் விதமாகச் செய்கிறது. அது அப்படியே - இருக்குமானால், அது என்னவாக இருக்கும்... வெறுமனே அச்சாரமே அவ்வாறு இருக்குமானால், நாம் உண்மையாகவே முழு மீட்பையும் கொண்டு இருக்கும் போது, அது எவ்வாறு இருக்கும்-? அது அற்புதமாக இருக்காதா-? 44. ஓ, என்னே-! அந்த மகத்தான நேரத்தில் எவ்வளவு சந்தோஷம் இருக்கும். அப்படியானால், நான் இங்கே வசிக்கிற இந்த பழைய சாவுக்குரிய தொற்றுவியாதி கொண்ட பூச்சி பிடித்த வீட்டை உயிர்த்தெழச் செய்வதாக எனக்கு வாக்குத்தத்தம் இருக்குமானால், ஒரு மீட்பைக் குறித்த வாக்குத்தத்தமும் எனக்கு இருக்குமானால், முற்றிலும் புதிதான ஒரு சரீரத்தை... அது ஒரு போதும் வயோதிபம் அடையாது; அது ஒருபோதும் வாடிப்போகாது, என்னவாக... நான் அதைக் கொண்டிருக்கப் போகிறேன் என்பதை எனக்கு நிரூபிப்பதற்கு, பாவ நிவிர்த்தியினால், நான் அதினுடைய ஏதோவொரு விதமான அச்சாரத்தைக் கொண்டிருக்க வேண்டியவனாய் இருக்கிறேன், அதாவது, ஒரு மனிதன் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு, படுத்தபடுக்கையாய் இருந்து, படுக்கையில் வைத்துக் கொண்டு வரப்படும் போது, நம்முடைய அன்புக்குரிய மருத்துவர், ‘அது நாங்கள் உதவி செய்யக் கூடிய கட்டத்தை தாண்டி விட்டது’ என்று கூறியிருக்கிறார், (அப்படியிருக்கையில்) முழங்கால்படியிட்டு அன்பான கர்த்தராகிய இயேசுவின் வார்த்தையின்படியும், அவருடைய பாவநிவிர்த்தியின்படியும், அதைச் செய்யும் படியான வாக்குத்தத்தத்தின்படியும் வேண்டிக் கொள்ளும்போது, அந்த மனிதன் சுகம் அடைந்தவனாய் எழுந்து, பருத்த உடலமைப்பபையும், சிவந்த முகத்தையும் கொண்ட மனிதனாய் இருப்பதைக் காணும்போது, அது நீங்கள் எப்பொழுதும் புசித்ததிலேயே இனிப்பான தேன் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். அது சரியே. நிச்சயமாக அது சரி தான். நாம் அதைக் குறித்து நிச்சயம் உடையவர்களாய் இருக்கிறோம். தேவன் அவ்வாறு கூறி இருக்கிறார். இந்த மீட்பின் புத்தகம், மீட்பு என்பது மீட்கப்படுவதாய் இருக்கிறது... 45. இப்பொழுது, இந்த யாத்திராகம புத்தகமானது மூன்று தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டது, நாம் அப்படியே சிறிது நேரம் அதைக் குறித்துத் தான் பேச விரும்புகிறோம். ஒருக்கால் அவைகளில் ஒன்றையோ, ஒரு வேளை இரண்டையோ இன்றிரவு பார்க்கலாம், அடுத்த தலைப்பை நாளை இரவில் வேறொன்றோடு கற்றுக் கொள்ளலாம். அது சாத்தானுடைய வல்லமை, விசுவாசத்தின் வல்லமை, தேவனுடைய வல்லமை என்பவைகளை அடிப்படையாகக் கொண்டது. 46. இப்பொழுது, நாம் இங்கே தொடக்கத்தில் அதை வாசிக்கிறோம், ஆதியாகமத்தை நாம் கடந்து சென்ற பிறகு – ஆதியாகமம் என்ற அருமையான புத்தகத்தை நாம் கடந்து சென்ற பிற்பாடு, நாம் யாத்திராகம புத்தகத்தின் போதனைக்குள் வருகிறோம், வெளியே அழைக்கப்பட்டவர்கள், வேறு பிரிக்கப்பட்டவர்கள். தேவனுடைய திட்டத்தோடு சாத்தானும் துரிதமாகக் கிரியை செய்வதை நாம் கண்டு கொள்கிறோம். அந்த சர்ப்பமாகிய பிசாசினுடைய கொடிய கேடு விளைவிக்கிற கண்ணை நாம் காண்கிறோம், அவன் எப்போதுமே தேவனுடைய திட்டம் பூமியில் செய்யப்படுவதற்கு முன்பே அதில் குறுக்கிட்டு தடுக்க முயற்சி செய்கிறான். பெரும்பாலும் அது வரும்போது, அவன் எப்போதுமே அதை அறிந்து கொள்கிறான். அவனைக் கவனியுங்கள். நாம் மீட்பின் புத்தகமாகிய யாத்திராகம புத்தகத்தின் ஏறக்குறைய முதலாம் அதிகாரத்தில் வந்த உடனே, அங்கே பிசாசு தேவனுடைய முழு திட்டத்தையும் தடை செய்ய வருகிறதை நாம் கண்டு கொள்கிறோம். முதலாவது காரியம் என்னவெனில் பார்வோன் மூலம் செய்யப்பட்ட உபத்திரவமாய் இருக்கிறது, அவர்கள் எபிரெயர்களாய் பிறந்த எல்லா பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும் நதியில் எறிந்து மூழ்கடித்துக் கொன்று போட்டனர். 47. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அந்த அதே பல்லிக்கண்களுடைய பிசாசு... அதற்கு முன்பே ஆதியில் எவ்வாறு நடந்தது. ஆபேலைக் கவனியுங்கள். அந்த நீதியான சந்ததியாகிய ஆபேலின் வழியாக அந்த மீட்பர் வரப்போகிறார் என்பதை சாத்தான் கண்ட உடனே, தேவன் உபயோகிக்கப் போகிற, தேர்ந்தெடுக்கப்பட்ட கருவியை, அதே காரியத்தை அவன் அழித்துப் போட தீவிரமாய் கிரியை செய்யப் போனான். அவன் நேராக அதை அழித்துப் போடும்படி சென்றான். 48. யோசேப்பின் காலத்தில் அதைக் கவனியுங்கள், தேவன் யோசேப்பின் வழியாக தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது, சாத்தான் எவ்வாறு வருகிறான் என்பதைக் கவனியுங்கள். அங்கே ஏறக்குறைய – ஏறக்குறைய ஆதியாகமம் 27-ம் அதிகாரத்தில் சாத்தான் எப்படியாக யோசேப்பை அழித்துப் போட வருகிறான் என்பதைப் பாருங்கள், அவன் அதைச் செய்ய வருகிறான். பாருங்கள், தேவன் உபயோகப்படுத்தப் போகிறதாய் இருந்த அதே கருவியை அழித்துப் போட அவன் வருகிறான்... 49. நாளாகமங்களின் புத்தகத்தில், ஏறக்குறைய 22-வது அதிகாரத்தில், அவன் அந்த இராஜரீக வித்தை எவ்வாறு அழிக்க முயற்சித்தான். மத்தேயு சுவிசேஷம் 2-ம் அதிகாரத்தில், சாத்தான் எவ்வளவு துரிதமாக வேலை செய்கிறான் என்பதைப் பாருங்கள். மீட்பர் பிறக்கப் போகும் ஏறத்தாழ சரியான நேரமாக அது இருந்ததை அவன் அறிந்த போது, அவன் அரசியல் தலைவர்களுக்குள் சென்று, ஒரு உபத்திரவத்தைக் கொண்டு வந்து, கர்த்தராகிய இயேசுவைக் கொல்லும் படியாக இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா சிறு பிள்ளைகளையும் அழித்துப் போட்டான். 50. மத்தேயு 27-ல் அவன் எவ்வாறு அதைச் செய்ய முயற்சித்து வெற்றி பெற்றான். அதைச் செய்வதில் அவன் வெற்றி கண்டான். ஆனால் நான் விரும்புவது இதோ இருக்கிறது: சாத்தான்... மாத்திரமே முடியும். அவனுடைய அரசாட்சி நதி வரை மட்டுமே ஆட்சி செய்கிறது. நதி என்பது, ‘மரணம், வேறு பிரிதல்’ என்று அர்த்தம். சாத்தானுடைய ஆட்சி உரிமை அவ்வளவு தூரத்திற்குத் தான் வர முடியும்; அதோடு அது நின்று போகிறது. ஆனால் அதன் பிறகு தேவன் துவங்குகிறார். 51. ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு விசுவாசிகளும் கல்லறையண்டை நின்று கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்காகவும், தங்கள் அன்பார்ந்தவர்களுக்காகவும் அழுது கதறிக் கொண்டிருக்கும் நேரத்தில், விசுவாசமானது சரியாக அதன் மத்தியில் உறுதியாக நிற்க முடிந்து, அதோ அங்கே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த ஒரு தேவனிடமாக அந்த நிழல்களுக்கு அப்பால் நோக்கிப் பார்க்க முடியும் என்பதை அறிந்து கொள்வது என்பது இன்றிரவு என்னவொரு அருமையான நம்பிக்கையாய் உள்ளது. 52. ஓ-! இங்கே நமக்கு விளக்கிக்கூறப்படும் இந்த அருமையான புத்தகத்திலுள்ள உவமைகளில் இருக்கும் காட்சி என்னவொரு காட்சியாக உள்ளது. அங்கே முற்காலத்திலிருந்த அக்காரியங்களின் மூலமாக, அவர் என்ன செய்ய போவதாய் இருந்தார் என்றும், பரிபூரண மீட்பராகிய நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் அதன் ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வாறு உறுதிப்படுத்தினார் என்றும், தேவன் நமக்கு எப்படியாகப் போதித்துக் கொண்டு இருக்கிறார். 53. அவர்கள் எவ்வாறு அந்த நதியண்டை சென்று, அந்த சிறு குழந்தைகளை எடுத்து அவைகளை அந்த நதியில் எறிந்து விட்டனர். பிறகு, கவனியுங்கள், அது தான் சாத்தானின் அரசாட்சியின் முடிவாக இருக்கிறது. அவனுடைய அதிகார வரம்பானது அந்த நதி வரைக்குமுள்ள தூரம் மட்டுமே வர முடியும், அதன் பிறகு அவனுடைய வல்லமைகள் முடக்கப்பட்டு போகும். அது தான், சாத்தானிடம் மரணத்தின் வல்லமை தான் இருக்கிறது, ஆனால் மரண நிழல்களுக்கு அப்பால் உயிர்தெழுதலின் வல்லமையைக் கொண்டிருக்கிற ஜீவனுள்ள தேவனுக்கு நன்றி. இது எவ்வளவு அற்புதமான காரியமாக உள்ளது. 54. நீங்கள் இதைக் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு நிமிடம் இதை கூர்ந்து கவனியுங்கள். நாம் ஒவ்வொருவரும் இங்கே இந்த சாத்தானுடைய உலகத்தில் அவனுடைய ஆளுகைக்குள் (domain) இருக்கிறோம். அதில் அங்கே ஒரு சிருஷ்டியும் இருப்பதற்கு முன்பே அவன் எரிகிற கந்தகக் கற்களில் நடந்து சென்றான். அது அவனுக்கு சொந்தமானதாய் இருக்கிறது. இன்றிரவு அவன் அதை ஆளுபவனாய் இருக்கிறான், ஒவ்வொரு அரசாங்கத்தையும், ஒவ்வொரு அரசியலையும் அவன் ஆளுகை செய்கிறான். அதன் நிமித்தமாகத் தான் நாம் யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும், பிரச்சனைகளையும் கொண்டிருக்கிறோம். ஆனால், ஓ, அதைக் குறித்து எண்ணிப்பாருங்கள். அப்படியானால் ஏதோவொரு மகிமையான நாளில்-!... 55. ஓ, சாத்தான் இயேசுவை மலையின் உச்சிக்குக் கொண்டு சென்று, உலகத்தின் இராஜ்யங்கள் எல்லாவற்றையும் அவருக்குக் காண்பித்த போது, இருந்த அவ்வளவு இராஜ்யங்களையும், அல்லது இருக்கப் போகிறவைகளையும் காண்பித்தான். அவன், ‘நான்... இவைகளெல்லாம் என்னுடையது. நான் விரும்புகிற எதையும் அவர்களிடம் செய்வேன். நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளை உமக்குத் தருவேன்’ (மத்தேயு 4:9) என்றான். 56. எப்படியும் ஆயிரவருட அரசாட்சியில் அந்தக் காரியங்களை தாம் சுதந்தரிக்கப் போகிறார் என்பதை இயேசு அறிந்திருந்தார். எனவே அவர், ‘எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே. கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதி இருக்கிறதே (மத்தேயு 4:10)’ என்றார். 57. நாம் சாத்தானையும், அவன் வாலிப பெண்களையும், மனிதர்களையும், வயதானவர்களையும், இங்கே வெளியே தெருவிலுள்ள யாவற்றையும் சீர்கெட்டுப் போகப் பண்ணின அவனுடைய சகல காரியங்களையும், அவர்கள் குடித்து வெறிப்பதையும், சபிப்பதையும், கெட்ட வார்த்தைகளால் திட்டுவதையும், அவர்கள் சாத்தானுடைய அதிகார எல்லைக்குள் இருக்கிற விதமாய் நடந்து கொள்வதையும் காணும் போது... ஆனால் விசுவாசக் கண்களால் அதற்கும் அப்பால் நோக்கிப் பார்த்து, ஒரு பரிபூரண உலகத்தையும், ஆயிர வருட அரசாட்சியின் காலத்தில் இருக்கப் போகிற பரிபூரண ஜனங்களையும் நம்மால் காண முடிகிறது, அங்கே எந்த சபித்தலோ, எந்த சத்தியம் பண்ணுதலோ (swearing), எந்த குடி வெறியோ, எந்த மரணமோ, எந்த துக்கமோ இருக்காது. அந்த மீட்பரினிமித்தமாக அவை அனைத்தும் துடைத்து நீக்கப்பட்டிருக்கும். 58. இப்பொழுது, சாத்தானின் வல்லமையில் இருந்து அடுத்த வல்லமைக்கு வருகிறோம், இப்பொழுது, அது உங்கள் விசுவாசமாய் உள்ளது, சாத்தான் நதியோடு முடிந்து விடுகிறான். அதற்காக தேவனுக்கு நன்றி. அவன்... மரணத்தின் தவறு எதுவும் எப்போதாவது தொடக்கூடிய எதற்கும் அப்பால் தேவன் ஒரு வல்லமையைக் கொண்டிருக்கிறார். தேவன் உயிர்த்து எழுதலாய் இருக்கிறார். அங்கு... 59. இப்பொழுது, சாத்தான் அந்த நதியோடு முடிவடைய வேண்டியவனாய் இருக்கிறான். நதி என்பது மரணத்தைக் குறிக்கிறது. சிறு பிள்ளைகள் ஆற்றில் தூக்கி வீசப்பட்டனர், அதோடு அது முடிவு பெறுகிறது; அவர்கள் மரித்துப் போய் விட்டனர். அங்கே ஆற்றில் முதலைகளும் (Crocodiles), ஒரு வகை முதலை இனங்களும் (gators), மற்றும் யாவுமே இருந்தன, அவைகள் இந்த பிள்ளைகளை பற்களால் அரைத்து தின்றன. அதுவே அதன் முடிவாக இருந்தது. ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு, ஆற்றிலிருந்த மிருக ஜீவன்களால் தின்னப்பட்டன. 60. இப்பொழுது, மோசே பிறந்த போது, மோசே தேவனுடைய கருவியாகவும், அவருடைய - அக்காலத்தின் வேலைக்கென்று அவருடைய கருவியாகவும் தேவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவனாகவும், அருளப்பட்டவனாகவும், முந்நியமிக்கப்பட்டவனாகவும், தெரிந்து கொள்ளப் பட்டவனாகவும், முன்குறிக்கப்பட்டவனாகவும் இருந்தான், அவனைப் பிடிக்கும்படி சாத்தான் தன்னால் இயன்ற யாவற்றையும் செய்து கொண்டிருந்தான், ஆனால் தேவனோ அதை அவன் மேலேயே இழுத்து தள்ளிப் போட்டார். 61. ஏன்-? நாம் இங்கே லேவியின் ஒரு குமாரத்தியைக் காண்கிறோம், அல்லது, லேவியின் குமாரர்களில் ஒருவன் சென்று லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணி இந்தப் பிள்ளைகள் - இந்தப் பிள்ளை பிறந்தது, அது பிறந்த போது, அது சரியான விதமான அழகுள்ள பிள்ளை என்று அவர்கள் கண்டார்கள். ஆமென். நீங்கள் இதைப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன். 62. அவள் அப்பிள்ளையை உற்று நோக்கினாள், அங்கே ஏதோவொன்று சம்பவித்துக் கொண்டு இருந்தது. அவர்கள் விடுவிக்கப்பட வேண்டிய சமயம் நெருங்கி விட்டதை அவர்கள் அறிந்து கொண்டனர், என்னுடைய அபிப்ராயத்தின்படி, பரிசுத்த ஆவியானவர், ‘இது தான் அவன்’ என்பதை வெளிப்படுத்தினார். அவள் இராஜாவின் கட்டளைகளுக்கோ, அவனுடைய பயமுறுத்துதல்களுக்கோ பயப்படவில்லை. 63. அங்கே தான் உங்கள் காரியம் இருக்கிறது. விசுவாசம் பற்றிப் பிடிக்கும் போது, பயம் அகன்று போய் விடும். விசுவாசத்திற்கு பெரிய தசைகளும், மயிருள்ள நெஞ்சும் உண்டு. அது பேசும் போது, மற்ற யாவுமே அமைதியாகி விடுகிறது. புற்று நோய் பேசாமல் அமைதியாகி, வழியை விட்டு வெளியே போயாக வேண்டும். விசுவாசம் எழும்பி, ‘உட்கார்’ என்று கூறும் போது, கட்டியோ, காசநோயோ, மற்றவைகளோ வெளியே போய் விடுகிறது. அதோடு அது முடிவு பெற்று விடுகிறது. 64. ஓ, என்னே-! அது பார்வோன் இராஜாவாகவோ, அது யாராகவும் இருக்கட்டும், அந்த சிறிய இல்லத்தரசி (house woman) எழுந்து அந்த பிள்ளையைக் கண்ட போது, அவள் அந்த இராஜா சொன்னவைகளுக்குப் பயப்படவேயில்லை. அது தான் நாம் பேசப் போகிற இரண்டாவது வல்லமை. பிசாசின் வல்லமை, நிச்சயமாக, அவனிடம் வல்லமையும், மரணத்தின் அதிகாரமும் உண்டு, ஆனால் இரண்டாவது வல்லமையான விசுவாசமானது கொடுக்கப்பட்டு இருந்தது. விசுவாசமானது சாத்தானை வெட்கமடையச் செய்கிறது. நிச்சயமாக அது அவனை அவமானமடையச் செய்கிறது. 65. அந்த சிறு இல்லத்தரசி அச்சிறு குழந்தையை தன்னுடைய கைகளில் பிடித்துக் கொண்டு, அந்த இராஜாவின் கட்டளைகளுக்குப் பயப்படவேயில்லை. இராஜா சொன்னவைகளின் பேரில் அவள் கவனம் செலுத்தவில்லை; தேவனால் கூடும் என்பதை அவள் அறிந்திருந்தாள். தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்வார். 66. ஓ, நாம் மாத்திரம் இன்றிரவு அம்மாதிரியான விசுவாசத்தை அதிகரிக்கச் செய்யக் கூடுமானால். நம் மத்தியில் ஜீவிக்கிற அம்மாதிரியான விசுவாசத்தைப் பெற்றுக் கொண்டு, முக்கியமாக நம்முடைய சக மனிதர்களிடமும், சபையினூடாகவும் கடந்து செல்லுங்கள். வெறுமனே ஓர் உணர்ச்சி வசப்பட்ட விசுவாசமல்ல, ஆனால் இல்லை என்ற பதிலை எடுத்துக் கொள்ளாத ஓர் உண்மையான திடமான விசுவாசம். அது தேவன் அவ்வாறு கூறினார் என்பதை அறிந்திருக்கும், அதோடு அது முடிவு பெற்று விடுகிறது. எனக்கு அது பிடிக்கும். 67. இப்பொழுது அதைக் கவனியுங்கள். அவள் என்ன செய்தாள்-? அந்தப் பிள்ளைகள் எல்லார் மேலும் கடந்து சென்ற மரண தண்டனையிலிருந்து தன்னுடைய குழந்தையைத் தப்புவிக்கும் படி அவள் முயற்சி செய்து கொண்டிருக்கவில்லை, ஆனால் விசுவாசத்தினாலே அவள் ஒரு நாணற்பெட்டியை (ark) உண்டு பண்ணி, அதில் உள்ளும் புறம்பும் பிசினைப் பூசி, மரண வெள்ளங்களினூடாக அவனைக் கொண்டு செல்வதற்கான ஒரு பரிகாரத்திற்காக அவள் அதில் கீல் பூசினாள் (யாத். 2:3). 68. கிறிஸ்துவைக் குறித்த என்னவொரு அழகான காட்சி-! ஒரு போதும் அதைப் புறக்கணித்து விடவில்லை, அல்லது ‘என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது (லூக்கா 22:42)’ என்றார். அவர் மரணத்தைப் தவிர்த்து புறக்கணித்து விடவில்லை, ஆனால் நாம் மரண நதியின் மேல் சவாரி செய்து செல்வதற்காக நமக்கு ஒரு பாவ நிவிர்த்தியை உண்டாக்கும்படி மரணத்தை ஏற்றுக் கொள்ள சித்தமுள்ளவராய் இருந்தார். இங்கே நம்மிடம் உள்ள காட்சி என்னவொரு அழகான காட்சியாக இருக்கிறது. அந்தத் தாயை நோக்கிப் பாருங்கள், அவள் இந்த சிறிய நாணல் செடிகளை ஒன்றாக வைத்து அந்த நாணல் பெட்டியைச் செய்து, கொஞ்சம் பிசினை எடுத்து, அந்த பெட்டியின் உள்ளே எல்லா இடங்களிலும் பூசி, அதன் வெளிப்புறத்தில் கீல் பூசினாள். 69. இப்பொழுது, லேவியராகமத்தில், நீங்கள் வாசிப்பீர்களானால், ‘கீல் (pitch)’ மற்றும் ‘பிசின் (atonement)’ என்ற வார்த்தைகள் கூட ‘பாவநிவிர்த்தி (atonement) என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளதைக் கண்டு கொள்வீர்கள். அதை வாசித்து, அது உண்மை அல்லவா என்பதைக் கண்டு கொள்ளுங்கள். அது ஒரு பாவநிவிர்த்தியாக இருக்கிறது. அது மேலும் - செய்யப்பட்டது. நோவாவின் காலத்தில் அது பாவநிவிர்த்தியாக (atonement) அழைக்கப்பட்டது. நோவா 120 வருடங்கள் பிரசங்கித்த போதிலும், தன்னுடைய சொந்த வீட்டார் தவிர வேறு யாரும் இரட்சிக்கப்படவில்லை, அவன் தேவ எச்சரிப்புப் பெற்று (எபிரெயர்-11:7), நியாயத்தீர்ப்பு வருவதை அறிந்து கொண்டான்... அவனால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை அவன் அறிந்து கொண்டான், ஆனால் தேவனோ அவனுக்காக ஒரு பாவநிவிர்த்தியை அருளினார். நான் அதை நேசிக்கிறேன். தேவன் ஒரு வழியை உண்டாக்குவார். 70. அது மிக ஆழமாக மனதில் பதியட்டும். என்ன தொல்லை இருந்தாலும் காரியமில்லை, தேவன் ஒரு வழியை உண்டாக்குவார். 70. அவர் வேதாகமத்தில் யேகோவா-யீரே என்று அழைக்கப்பட்டார். யேகோவா-யீரே என்பதற்கு ‘கர்த்தர் அருளுவார்’ என்று அர்த்தம். ஆமென். அவர் இன்னும் யோகோவா-யீரே வாக இருப்பதை அறிந்து கொள்வதற்காக நான் இன்றிரவு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். சூழ்நிலை எப்படியிருந்தாலும் காரியமில்லை, தேவன் ஒரு வழியை உண்டாக்குவார், தப்பிக்கும் படியான ஒரு வழியை உண்டாக்குவார். 71. ஒரு வேளை சாத்தான் உங்களை ஒரு புற்று நோயினால் இயங்க முடியாதபடி ஒரு மூலையில் தடுத்து நிறுத்தியிருந்தாலும், தேவன் தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழியை உண்டாக்குவார். சாத்தான் ஒருக்கால் உங்களை ஒரு காரின் கீழே அசைய முடியாதபடி பண்ணியிருந்தாலும், தேவன் தப்பிக் கொள்ளும்படியான ஒரு வழியை உண்டாக்குவார். சாத்தான் ஒருக்கால் உங்கள் குடும்பத்தினரை உங்களிடமிருந்து தூரமாகக் கொண்டு சென்றிருக்கலாம், ஆனால் தேவன் தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழியை உண்டாக்குவார். தேவனிடம் ஒரு வழி உண்டு. 72. கவனியுங்கள். மேலும் இப்பொழுது, நோவா... அந்தப் பேழையை (ark) சிறிது நேரம் கவனிப்போம், அவன் எவ்வாறு முன்கூட்டியே அதைச் செய்திருந்தான் என்று பார்ப்போம். இப்பொழுது, அவன் அப்படியே வெளியே சென்று, எந்த மாதிரியான ஒரு மரத்தையும் வெட்ட முடியவில்லை, ஏனென்றால் எந்த மாதிரியான காரியமும் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளில் நிற்காது. வெள்ளமானது முழு உலகத்தையும் அழிக்கப்போகிற தெய்வீக நியாயத்தீர்ப்பாக இருந்தது, அது தெய்வீக நியாயத்தீர்ப்பை முகமுகமாய் சந்திக்கும் ஏதோவொன்றாக இருக்க வேண்டியிருந்தது. 73. என்னுடைய நண்பனே, முழு உலகத்தின் மேலும் ஒரு தெய்வீக நியாயத்தீர்ப்பு வந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் இன்றிரவு அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஞாபகம் கொள்ளுங்கள், இப்பொழுது, சாத்தான் தன்னுடைய ஆட்சி எல்லையைக் கொண்டு இருக்கிறான். உங்களுக்கு ஒரு பெரிய நேரம் இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள், ஆனால் பொறுத்திருங்கள்-! அவனுடைய அரசாட்சி அதிசீக்கிரமாய் முடிந்து போய் விடும். அதன் பிறகு தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும். நான் அந்த இராஜ்யத்தில் இருக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். 74. இப்பொழுது, இன்றைய நாளின் உபத்திரவங்களில் நிலைத்து நின்று, அந்த மகத்தான இராஜாவின் வருகையையும், அவருடைய இராஜ்யத்தையும், அரசாட்சியையும் எதிர் நோக்கியிருந்து, மற்ற தேவர்கள் மரித்து விட்டார்கள் என்று கருதப்படுவது போன்று அவர் மரிக்கவில்லை என்றும், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, என்றென்றுமாக ஜீவிக்கிறார் என்பதையும் நான் ஜனங்கள் முன்பாக கூறவே உறுதியாக முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்... அவனைக் கவனியுங்கள். ஓ, எனக்கு இது பிடிக்கும். நான் அதைக் குறித்து சிந்திக்கும் போதே அது என்னை மிகவும் பக்திபரவசமடையச் செய்கிறது. அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்தால்-! இப்பொழுது, நோவா அப்பேழையை எம்மாதிரியான மரத்தைக் கொண்டு கட்ட வேண்டும் என்று தேவன் தெளிவாகக் காட்டினார். அந்த மரம் கொப்பேர் மரம் என்று அழைக்கப்பட்டது. (ஆதி.6:14) 75. ஒரு நாள், நான் மேலே நோக்கிப் பார்த்து, ‘நல்லது, அது எம்மாதிரியான ஒரு மரமாக இருந்திருக்கும்’ என்று எண்ண நேரிட்டது. எனவே, நான் வார்த்தைக்குள் பின்னோக்கிப் பார்க்கத் துவங்கினேன் - கொப்பேர் மரம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக அகராதிகளையும் மற்றவைகளையும் பார்க்கத் துவங்கினேன். பிறகு நான் - நான் புரிந்து கொண்டேன்... அது என்னவென்பதைக் கண்டு கொண்டேன், அது மிகவும் மிருதுவான ஒரு மரமாகும், அது மிகவும் மிருதுவான மென்மையான மரமாகும். நல்லது, நான், ‘அது விசுவாசிக்கு எப்படி பொருந்த முடியும் என்று சொல்லுங்கள்’ என்று எண்ணினேன். பேழையானது சபையாகக் கட்டப்படுகிறது. பேழை என்பது சபையாக இருந்தது. நான், ‘ஓ, தேவனே, நான் அதைக் காண்கிறேன்’ என்றேன். அது விசுவாசிகளைக் கொண்டு கட்டப்படுகிறது. அது குளிர்ந்து போனதும், அலட்சியமானதும், கடினமானதுமாக இருக்காது, ஆனால் மிருதுவானதும், தேவனுடைய கரங்களுக்கு எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. அதைக் கொண்டு தான் பேழையானது கட்டப்பட்டது. ஓ, நான், ‘தேவனுக்கு ஸ்தோத்திரம்’ என்றேன். அது நன்றாய் உள்ளது. மென்மையான இருதயம் படைத்தவர்களாகவும், ‘தேவனே, பாவியாகிய என் மேல் இரக்கமாய் இரும்’ என்று கூறி, நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள் என்று ஒப்புக்கொள்ள விருப்பமுள்ளவர் களாயுமிருக்கிறீர்கள். அப்படியானால், தேவன் அதை எடுத்து, கொண்டு சென்று, அதைப் பேழையில் பொருத்த முடியும். 76. அதன் பிறகு சாத்தான் கூடவே வந்து, ‘ஆனால், நீ கொஞ்சம் கூடுதலாக வாசித்து, அது என்னவென்று அறிந்து கொள்வது நல்லது’ என்றான். அந்த மரமானது... மிருதுவான மரத்தில் திறந்த துளைகள் இருக்கும். அங்கே... அது அப்படியே மிகவும் மிருதுவாக இருக்கிறது, நீங்கள் அம்மாதிரியான ஒரு கொப்பேர் மரத்தை தண்ணீரில் போட்டால், ஒரு சில நிமிடங்களில் அது மிதக்க முடியாத அளவில் தண்ணீரில் தோய்ந்து, நீரால் நிரம்பி, அந்தக் கப்பலானது (பேழையானது) நீரால் நிரம்பி விடும். நீங்கள் கொப்பேர் மரத்தைக் கொண்டு ஒரு பேழையை உண்டு பண்ணி, அதில் கீல் பூசி, தண்ணீரில் (விட்டால்), அதில் மிகவும் திறப்புகள் இருந்து, அந்தத் துளைகள் மிகவும் திறந்து காணப்பட்டு, அந்த மரத்தை மென்மையாக ஆக்கி, தண்ணீர்கள் சரியாக அதனுள் முழுவதுமாக நனைந்து, அந்தக் கப்பலானது (பேழையானது) சிறிது நேரத்தில் மூழ்கி விடும் அளவுக்கு ஆகி விடும். 77. ஆனால் அதன் பிறகு, இந்தப் பேழையில் கீல் பூசும்படிக்கு தேவன் நோவாவிடம் கூறினதைக் கவனித்தேன். அதன் உள்ளேயும், வெளியேயும், இருபுறமும் கீல் பூசு. நல்லது, பிறகு, எதிலிருந்து அந்த கீல் உண்டாக்கப்பட்டது என்பதை கண்டேன். அது ஒரு பைன் மரத்திலிருந்து (தேவதாரு மரத்திலிருந்து) எடுக்கப்பட்டது, அது கடினமான ஒரு மரமாகும், எப்போதும் பசுமையாயுள்ளதும், எப்போதும் ஜீவிக்கிறதுமான அந்த மரம் வெட்டப்பட்டது. அது வெட்டப்பட்டு, அவர்கள் அதிலிருந்து கெட்டியான பிசினை அடித்தெடுக்கும் வரை, அவர்கள், அடிக்கும்படி உபயோகிக்கும் ஒரு இரும்பைக் கொண்டு அவர்கள் அம்மரத்தை அடிக்கிறார்கள். அதன் பிறகு அந்த கெட்டியான பிசினை ஒரு பானையில் சேகரித்து, அது மிக மிக சூடாகும் வரைக்கும் அதை கொதிக்க காய்ச்சுகிறார்கள், பிறகு இந்த சூடான பிசினானது இந்த கொப்பேர் மரத்தின் மேல் ஊற்றப்பட்டது, அது திறக்கப்பட்டு, அதில் அப்படியே உறிஞ்சப்படுகிறது. அது அந்த பிசினால் முழுவதுமாக நிரம்பின போது, அது... ஒருவிசை அந்த பிசினால் அது நிரம்பும் போது, அது ஒன்றோடொன்று சேர்ந்து உறுதியாகி விடுகிறது. அப்போது அது உருக்கு இரும்பைக் காட்டிலும் கடினமாகி விடுகிறது. 78. ‘கர்த்தாவே, அது தான் காரியம் ஒரு நல்ல திறந்த இருதயமுடைய நபரை எடுத்துக் கொண்டு, அந்த விசுவாசிக்குள் பரிசுத்த ஆவியோடும் அக்கினியோடும் பரிசுத்த ஆவியாகிய கீலானது, அவர்கள் முழுமையாக உறிஞ்சும் வரைக்கும் ஊற்றுப்படுமானால், அவர்கள் இனி மேலும் அவர்களல்ல’ என்று நினைத்தேன். அப்போது அவளால் (எந்த) அலைகளிலும் கெட்டியானதாக இருக்க முடியும், (எந்த) மரத்துண்டுகளில் அது மோதினாலும், பாதைக்கு வெளியே சென்று அவைகள் மேல் இடித்தாலும், அது தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கும். அல்லேலூயா-! இன்று நியாயத்தீர்ப்புகளில் நிலை நிற்கக் கூடிய ஒரே காரியம் என்னவெனில், மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியினால் நிறைந்த கிறிஸ்தவன் தான். தேவன், தேவ ஆவியை உஷ்ணப்படுத்தி (het), அதை அவர்கள் மேல் ஊற்றி, அவருடைய முழு மெய் பொருளாலும் அவர்களை முழுமையாக மூழ்கச் செய்கிறார். ஆமென். எனக்கு அது பிடிக்கும். 79. அப்படியானால் அவன்... துவங்குகிறான், அவன் உண்மையாகவே வலது புறமோ இடது புறமோ என்று பார்க்காமல் பிசாசின் ஆட்சி எல்லைக்குள்ளாக அதை நெருக்கியடித்துக் கொண்டு செல்ல முடியும். ஆமென். அவ்வாறு தான் விசுவாசி இருக்கிறான். அவன் மேல் உண்மையாகவே ஊற்றப்பட்டிருக்கிறது... அவன் மென்மையான இருதயம் படைத்தவன், தேவன் அப்படியே அவன் மேல் தெய்வீக அன்பை முழுவதுமாக ஊற்றுகிறார், தேவனால் அனுப்பப்பட்ட தெய்வீக நியாயத்தீர்ப்பை அவனால் தாங்கிக் கொள்ள முடியும். அது நோவாவை அதனூடாக சுமந்து சென்றது. 80. உள்ளும் புறம்பும் முழுவதுமாக கீல் பூசப்பட்டதும், பிசினும் கீலும் பூசப்பட்டதுமான தன்னுடைய சிறு நாணற்பெட்டியோடு இருக்கிற இந்த சிறு தாயைக் காண நான் எவ்வளவாய் விரும்புகிறேன். இப்பொழுது, அவள் ஆற்றண்டை வருகிறாள். அவளுக்கு - அவளுக்கு விருப்பமில்லை தான்; அவளுடைய சிறு குழந்தையை... அவ்வாறு செய்ய அவள் தயாராக இல்லை. ஆனால் அவள் எங்கோ ஓரிடத்தில் அவனை மறைத்து வைக்க வேண்டியிருந்தது... ஆனால் அவளுடைய விசுவாசக் கண்களால், தேவன் என்ன செய்யப் போகிறார் என்பதை அவள் கண்டாள். அவள் அவனை இந்த சிறு நாணற்பெட்டிக்குள் வைத்து ஆற்றண்டை அதை எடுத்துக் கொண்டு வந்தாள், மேலும் சந்தேகமேயில்லை, நண்பர்களே, அது ஒரு இயற்கையான செயலாக இருந்தது என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அது ஒரு இயற்கைக்கு மேம்பட்ட செயலாக இருந்திருக்க வேண்டும். 81. அவளுடைய அந்தச் சிறு குழந்தையானது, தண்ணீர் புகுந்து விடாதபடி அதைக் காத்துக் கொள்ளப் போகிற மரணப்பெட்டியில் இருந்தபடியே, அவள் அதை வைத்துக் கொண்டு, தன்னுடைய கண்களில் பளிங்கு போன்ற கண்ணீர் ததும்ப அங்கே நின்று கொண்டிருந்தாள். நிச்சயமாக, அவள் விசுவாசத்தினாலே, அந்த எல்லா இருண்ட மேகங்களுக்கும் பின்னால், அந்தக் குழந்தையை அது சேரும் இடத்திற்கு கொண்டு செல்லுகிற ஒரு ஜீவனுள்ள தேவன் இருக்கிறார் என்பதை அவள் விசுவாசித்தாள் என்று அறிந்திருந்தாள், அது ஒரு பொருத்தமான தகுதியுடைய குழந்தை என்பதை அவள் கண்டு கொண்டிருந்தாள். ஆமென். 82. சிறிய பழமை வாய்ந்த பரிசுத்த ஆவி சபையைக் குறித்தும் நான் இன்றிரவு அவ்விதமாகத் தான் எண்ணுகிறேன். அது ஒருக்கால் இந்த வழியாகவும், அந்த வழியாகவும் உதைத்து தள்ளப்படலாம், எல்லாவிதமாகவும் அழைக்கப்படலாம், ஆனால் தேவன் அந்தக் கீலை (pitch) அந்த சபைக்குள் ஊற்றியிருக்கிறார் என்பதை நான் அறிவேன், மேலும் ஏதோவொரு நாளில்... எவ்வாறு என்று எனக்குத் தெரியாது, என்னால் உங்களிடம் கூற முடியாது, ஆனால் தேவன் அதை (சபையை) அது சேருமிடத்தில் கொண்டு போய் சேர்ப்பார். எப்படியென்று எனக்குத் தெரியாது. ஏனென்றால், அது பரிசுத்தாவியானவரால் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன். அது எல்லாமே எனக்கு இயற்கைக்கு மேம்பட்டவைகளாக உள்ளன. எனக்கு அது புரியவில்லை. நான் வெறுமனே அதை விசுவாசித்து, அதை ஏற்றுக் கொண்டு, அலைகள் தொடர்ந்து போகிற விதமாக, அதனோடு போய்க் கொண்டிருக்கிறேன். 83. அவள் இந்த சிறு நாணற்பெட்டியில் எவ்வாறு கீல் பூசி, அதை அந்தப் பெரிய தண்ணீர் தடாகத்தில் (ocean) வைத்தாள்... அந்தத் தண்ணீர் தடாகத்தில் (ocean) முதலைகளும், மற்றும் யாவுமே இருந்தன என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஆனால் அந்தத் தாயின் இருதயத்தில் ஒரு துளி பயமும் இல்லாதிருந்தது. அவள்... அவள் அந்தக் குழந்தையை அங்கே உள்ளே வைத்த போது, அநேக வருடங்களுக்கு முன்பு, விசுவாசத்தினாலே நடந்து, இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல அழைத்து, அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல உறுதியாய் இருந்த, தன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாம் நடந்து சென்ற அதே அடிச்சுவடுகளில் நடந்து கொண்டிருந்தாள். 84. இன்றிரவு ஆபிரகாமின் பிள்ளைகளாகிய எந்த மனிதனோடும் எந்த பெண்ணோடும் உள்ள காரியம் அதே காரியம் தான். விசுவாசத்தினாலே, நீங்கள் கீல் பூசுகிறீர்கள் என்பதை அறியாமல் இருக்கிறீர்கள், எந்த இயற்கைக்கு மேம்பட்டதையும் காண்பிக்க முடியவில்லை, அல்லது, சரியாகச் சொன்னால் எந்த அடையாளத்தையும் காண்பிக்க முடியவில்லை, அது என்னவென்பதை நிரூபிக்க முடியவில்லை, ஆனால் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், ஏனென்றால் தேவன் அவ்வாறு கூறினார்; நீங்கள் அவருடைய வார்த்தையில் அவரை எடுத்துக் கொள்ளுகிறீர்கள். ஆமென். அது தொடர்ந்து சம்பவிக்கும் விதமாக, இப்பொழுது அவரை நோக்கிப் பாருங்கள். என்னே, இந்த இரவுகள் அப்படியே போதுமான நீண்ட இரவுகளாக இருக்கவில்லை. கவனியுங்கள், நீங்கள் சரியாக முக்கிய விஷயத்தைப் புரிந்து கொள்ளும் போது, நீங்கள் நிறுத்தியாக வேண்டும். நாம் அப்படியே கொஞ்ச தூரம் கூடப் போகலாம். நாம் சிறிது நேரம் இந்தக் குழந்தையைப் பின்தொடர்ந்து போகலாம். 85. அவள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டவளாய், அக்குழந்தையை வெளியே அந்தத் தண்ணீர் தடாகத்தில் வைக்கிறாள். உங்களுக்குத் தெரியும், அவள் அங்கே அந்தக் கடலில், அல்லது நைல்நதியில், மரண வெள்ளங்களில் அவனை வைத்துக் கொண்டு இருந்தது போன்று, (அது ஒரு முன்னடையாளமாய் இருந்தது), நாம் சில நேரங்களில் நம்முடைய அன்பார்ந்தவர்கள் அடக்கம் பண்ணின இடங்களுக்கும் மற்ற இடங்களுக்கும் மிகுந்த வேதனையோடே கண்ணீர் வடித்துக் கொண்டு வரும் போது... இருண்ட மேகங்கள் எல்லா இடங்களிலும் இருந்த நிலையில், அவள் தன்னுடைய கண்களினால் அதனூடாக நோக்கிப் பார்த்த போது, அந்த மேகத்திற்குப் பின்னால் உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள ஒரு தேவன் இருந்தார் என்பதை அறிந்திருந்தாள். அவளால் தன்னுடைய கண்களைக் கொண்டு அதைக் காண முடியவில்லை, ஆனால் விசுவாசமானது அவளோடே அங்கு நின்று கொண்டிருந்தது. பலமான தசைகளையும், மயிருள்ள நெஞ்சையும் கொண்ட அம்மனிதனால் அங்கே அந்த மேகங்களுக்கும் அப்பால் நோக்கிப் பார்த்து, அந்த மேகங்களுக்குப் பின்னால் தேவனைக் காண முடிந்தது. 86. இன்றிரவு, ஒருக்கால் புற்று நோய் உங்கள் மேல் ஜெயமெடுத்திருக்கலாம்; ஒருக்கால் வேறு ஏதோவொன்று உங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம், சில வியாதியாக இருக்கலாம், பாவ வியாதியாகக் கூட இருக்கலாம், அல்லது அது என்னவாகவும் இருக்கலாம். இப்பொழுது, அது ஒருவேளை உங்களுக்கு இருண்டதாகவும், அச்சுறுத்துவதாகவும் காணப்படலாம்; ஒரு வேளை நீங்கள் ஒரு போதும் சுகமடையவே மாட்டீர்கள் என்பது போன்று தோன்றலாம். ஒரு வேளை அந்தக் காசநோயிலிருந்தோ, அந்த புரோஸ்டேட் சுரப்பி கோளாறிலிருந்தோ, அல்லது அந்த நுரையீரல் கோளாறிலிருந்தோ, (அது எதுவாகவும் இருக்கலாம்), அந்தக் கட்டியில் இருந்தோ, அந்த ஊனமுற்ற நிலையிலிருந்தோ உங்களால் குணமடையவே முடியாது என்பது போன்று தோன்றலாம். மருத்துவர் ஒருக்கால், ‘எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிற்று’ என்று கூறலாம். ஆனால் இன்றிரவு உங்களை சுதந்தரத்திற்குள் (possession) கொண்டு செல்ல ஆயத்தமாக சரியாக உங்கள் பக்கத்திலேயே (விசுவாசமானது) நின்று கொண்டிருக்கிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் அங்கேயிருக்கிற ஜெயத்தைக் காணுகிற விசுவாச கண்களானது உங்கள் அருகிலேயே நின்று கொண்டிருக்கின்றன. அல்லேலூயா-! 87. சாத்தான் மற்றும் அவனுடைய இருளுக்கும் அப்பால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தோடும், சர்வவல்லமையுள்ள தேவன் மேலுள்ள விசுவாசத்தோடும் அது மேலே உயரத்தில் நின்று கொண்டிருக்கிறது. மரணத்தின் பெரிய அலைகளும் ஏமாற்றங்களும் அதனுடைய அஸ்திபாரத்தை கீழிருந்து பயங்கரமாக அழித்துப் போட (wash out) முயற்சிக்கும் போதும், விசுவாசமானது காலங்கள் தோறும் இருக்கும் கன்மலையின் மேல் பயபக்தியோடு நிற்க முடியும், அதனால் ஒவ்வொரு புயலான மேகங்களினூடாகவும் ஒரு கழுகுக் கண்ணைக் கொண்டு ஊடுருவிச் செல்ல முடியும். அது அங்கே நின்று கொண்டு, அந்த வானங்களுக்கு அப்பால் நோக்கிப் பார்த்து, ‘தேவன் உண்மையுள்ளவர்’ என்று கூறி, மெய்யறிவும் ஜீவனுமுள்ள தேவனின் ஆலோசனையை விசுவாசிக்கும். ஆமென். 88. விசுவாசத்தால் என்ன செய்ய முடியும்-!... ‘விசுவாசமானது நம்பப்படுகிறவைகளில் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.’ நீங்கள் மாத்திரம் உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிற அந்த அற்பமான ஒரு சிறு சாட்டையாகிய (whip) அதே விசுவாசத்தினால், இன்றிரவு உங்களை சுதந்தரத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிப்பீர்களானால்,... அது உங்களைக் கொண்டு செல்லும், அதை நம்பி, அதில் விசுவாசம் வைத்து, தேவனுடைய வார்த்தை உண்மையாயிருக்கிறது என்று விசுவாசித்து, நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளும்போது, விசுவாசமானது உங்களுக்காக அற்புதங்களை நடப்பிக்கும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? 89. பிழையற்ற வார்த்தையாகிய, இதைக் கூறியிருக்கிற தேவனுடைய வார்த்தையானது, ‘விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளை, அல்லது அசுத்த ஆவிகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவானவைகளைக் குடித்தாலும், அது அவர்களைச் சேதப்படுத்தாது. அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள் ஆனால், அவர்கள் சொஸ்தமாவார்கள்’ (மாற்கு 16:17,18) என்று கூறுகிறது. தேவனுடைய வார்த்தை அதைக் கூறுகிறது. இங்கே இன்றிரவு ஒவ்வொரு தனிப்பட்டவர்களின் இருதயத்திலும் கிரியை செய்ய முயற்சிக்கிற ஏதோவொன்றிருந்து, ‘அது சத்தியமாயுள்ளது, ஆனால் அது என்னைக் குறிப்பிடுகிறதா-?’ என்று கேட்கலாம். ஆமாம்-! (அவரிடத்தில்) வருகிறவன் யாராயிருந்தாலும் அவர்களை அது குறிப்பிடுகிறது. அது உங்களையும் பொருட்படுத்திக் கூறுகிறது. 90. ஒவ்வொரு பாவியையும் இரட்சிக்கவும், பின்வாங்கிப் போன ஒவ்வொருவரையும் திரும்ப அழைக்கவும், வியாதிப்பட்டுள்ள ஒவ்வொரு நபரையும் சுகமாக்கவும் பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார்; அது தான் இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்தின் தன்மைகளாய் (attributes of the death of Jesus Christ) உள்ளன, மேலும் வெளிப்படுத்தும்படி அவர் இங்கே இருக்கிறார். தொடர்ந்து அநேக இரவுகளில் நீங்கள் அவரைக் கண்டு வருகிறீர்கள். தொடர்ந்து அநேக மணி நேரங்களில் அவர் கிரியை செய்வதை நீங்கள் கண்டு வருகிறீர்கள். மேலும் இப்பொழுது, இன்றிரவு, நம் மத்தியில் தவறிழைக்காத நபராகிய தேவனுடைய தூதனானவராகிய ஸ்தோத்தரிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் வருவதைத் தவிர்க்கும்படி (keep away) நான் முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரத்தில்... 91. எனக்கு நேரம் இருக்கிறது, ஏனென்றால் இச்சமயத்தில் தரிசனங்கள் கட்டிடம் முழுவதும் வந்து கொண்டிருக்கின்றன, அதைத் தவிர்க்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், அப்போது தான் என்னால் இந்த ஜெப வரிசையை கொண்டிருக்க முடியும். நான் ஒரு பொய்யனோ, ஒரு மாய்மாலக்காரனோ அல்ல. நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறிக் கொண்டிருக்கிறேன். அது சரியே. அதற்கு என்ன காரணம்-? நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் விரும்புகிறார். பரிசுத்த ஆவியானவர் வார்த்தையின் மேல் ஜீவிக்கிறார். அது உங்களிடத்தில் மிக முக்கியமானதாக இருப்பதற்கு காரணம் அது தான்; நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்போது, அது மிகைப்படுத்தப்படுகிறது. மனுஷன்... ‘மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்’ (மத்தேயு 4:4, லூக்கா 4:4) என்று எழுதி இருக்கிறதே. நீங்கள் பரிசுத்த ஆவியானவரை உங்களில் பெற்றுக் கொண்டு, போய் வார்த்தையிலிருந்து பானம் பண்ணும் போது, நீங்கள் விசுவாசத்தில் வளரத் துவங்குகிறீர்கள். அல்லேலூயா-! 92. நான் பித்துப் பிடித்தவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதெல்லாம் சரி தான். நான் வேறுவிதமாய் இருப்பதைக் காட்டிலும் நான் பித்துப் பிடித்தவனாய் (crazy) இருப்பதையே நன்றாக உணருகிறேன், எனவே நான் அப்படியே இவ்விதமாகவே தரித்திருப்பேன். ஆமென். தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும்படி அதற்கு ஒரு பித்துப் பிடித்த மனிதனே தேவைப்பட்டு, நான் பித்துப்பிடித்தவனாய் இருப்பதாக எண்ணப்பட்டு, இதை விசுவாசிப்பேனானால், நான் இருக்கிற விதமாகவே தரித்திருக்கட்டும். 93. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்றும், இன்றிரவு இங்கே இக்கட்டிடத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்றும் நான் விசுவாசிக்கிறேன். அவர் சகலத்தையும் அறிந்தவர் என்றும், அவர் எங்கும் பிரசன்னமானவர் என்றும், அவர் சர்வ வல்லவர் என்றும் நான் விசுவாசிக்கிறேன். (அல்லேலூயா-!) அவர் சகல ஞானமும் படைத்தவர், அவர் எல்லா இடங்களையும், பிரபஞ்சம் முழுவதையும் நிரப்பி உள்ளார். மேலும் அவர் சர்வ வல்லமையும் படைத்தவர். அவர் உண்மையும் ஜீவனுமுள்ள ஒருவராய் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? அவ்விதமாகத் தான் விசுவாசித்து, இரட்சிக்கப்பட வேண்டும். நீங்கள் இரட்சிக்கப் படக்கூடிய ஒரே வழி என்னவெனில், அதில் விசுவாசம் கொள்வது தான். அவர் இங்கே இருக்கிறார். தம்முடைய சபையை உற்று நோக்குகிற ஒருவர் அவர் தான். 94. இங்கே இருக்கும் எத்தனைபேர் - பெற்றிருக்கிறீர்கள். இன்றிரவு ஜெபிக்கப்பட வேண்டும் என்று வாஞ்சிக்கிற ஜனங்கள் இருப்பார்களானால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நான் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கும்படி செய்வதற்காக நான் நீண்ட காலமாக முயற்சித்து வந்திருக்கிறேன். பிசாசு ஊழியத்தில் போடக்கூடிய ஒவ்வொரு அக்கினியிலும் பரீட்சிக்கப்பட்டு, நூறு சதவீதம் உண்மை என்று தெளிவாக உரத்த சத்தமிடும் ஒரு ஊழியத்தோடு நான் ஐக்கிய நாடுகள் முழுவதுமாக ஒரு பக்கம் தொடங்கி மறு பக்கம் வரை சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன், இந்த ஊழியம் எப்போதுமே உண்மை உள்ளதாகத் தான் இருக்கும், இது நானல்ல; இது என்னுடையது அல்ல, இது அவருடையது. அவர் தமக்குச் சொந்தமானவர்களைக் குறித்து பொறுப்பெடுத்துக் கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியும். 95. மோசேயும் ஆபிரகாமும் தேவனை விசுவாசித்தனர். அவனுக்கு நூறு வயதாக இருந்தபோது கூட அவன் அந்தப் பிள்ளையைக் கொண்டிருக்கப் போகிறான் என்று தேவன் அவனிடம் கூறின போது, அவன் அப்பொழுதும் தேவனை விசுவாசித்தான்; அவர் வாக்குத்தத்தம் பண்ணினதைக் குறித்து அவரால் பொறுப்பெடுத்துக் கொள்ள முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான். தேவன் இன்றிரவும் முன்போலவே அவ்விதமே இருக்கிறார். இயேசு கிறிஸ்து, ‘நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள், இன்னும் அதிகமான கிரியைகளையும் செய்வீர்கள்’ (யோவான் 14:12) என்றார், அவரால் அதைச் செய்ய முடிந்தது. அவரால் செய்ய முடிந்தது மாத்திரமல்ல, அவர் அதைச் செய்வார், அவர் அதைச் செய்திருக்கிறார்; அவர் எப்போதுமே அதைச் செய்வார், ஏனென்றால் அவர் தேவனாயிருக்கிறார், அவரால் தவறிப்போக முடியாது. 96. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)... நம்முடைய சொந்த மனித மூளை அறிவின் நமது சிறிய பெலவீனமாக அது இருக்கிறது, நாம் அதை மனிதனின் மூளை அறிவு சார்ந்த விசுவாசம் என்று அழைக்கிறோம்... சிறிய ஏதோவொன்று, ‘ஆமாம், அது உண்மை; அது சரியென்று நான் விசுவாசிக்கிறேன்’ என்று கூறுவதை நாம் புரிந்து கொள்கிறோம். அது மூளை அறிவு திறனாகும் (intellectual). சகோதரனே, நீங்கள் உண்மையாகவே அதை விசுவாசிக்கும்படி செய்வதற்கு இங்கே ஏதோவொன்று சம்பவித்தாக வேண்டும். உங்களுடைய அறிவுசார்ந்த விசுவாசமானது மூளையைக் கொண்டு யோசித்து, ‘இப்பொழுது, நாம் பார்க்கலாம். ஆனால் என்னுடைய காரியம் மிகவும் கடினமானது, அதைச் செய்ய முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய காரியம் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாகும்’ என்று கூறும். அது தான் உங்களுடைய மூளையைக் கொண்டு யோசிப்பதாகும். தேவனால் கூடாத காரியம் என்ன இருக்கிறது-? 97. நீண்ட காலங்களுக்கு முன்பு, நான் இரட்சிக்கப்பட்ட போது, ஏறக்குறைய 23 வருடங்களுக்கு முன்பு, நான் இவ்விதமாக என்னுடைய சிந்தையில் யோசித்தேன்; தேவன் கூறின எதைக் குறித்தும் நான் கவலைப்படப் போவதில்லை, ஏனென்றால் தேவனால் தமது சொந்த வார்த்தையையும் மற்றும் எதையுமே காத்துக் கொள்ள முடியும்... எதாவது வேலையைச் செய்வது தேவனுக்கு மிகப் பெரிய காரியமாக இருக்குமானால், நான் அதைக் குறித்து கவலைப்படுவதினால் என்ன பயன்-? ஆமென். 98. அவர் சர்வ வல்லமையுள்ள தேவனாக இருப்பாரானால், அவர் சகல காரியங்களையும் செய்கிறார். அவரால் எல்லா காரியங்களையும் செய்ய முடியவில்லை என்றால், அவர் சர்வ வல்லமையுள்ள தேவனல்ல. எனவே, நான் அவரை சர்வ வல்லமையுள்ள தேவனாக விசுவாசிக்கிறேன். எனவே, நான் என்னைத் தானே அவருக்கு சமர்ப்பிக்கிறேன், என்னுடைய ஆத்துமாவையும், என்னுடைய சரீரத்தையும், என்னுடைய ஜீவியத்தையும், என்னுடைய சுவாசத்தையும், என்னுடைய மரணத்தையும், என்னுடைய உயிர்த்தெழுதலையும், அவருக்கு சமர்ப்பிக்கிறேன், ஏதோவொரு மகிமையான நாளில், அவர் வருவார். 99. (ஒலிநாடாவில் காலியிடம் – ஆசிரியர்.)... ஆனால் அவர் வருகிற நேரத்திலும், அவருடைய சபையானது ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற நேரத்திலும், நான் என்னுடைய கரங்களை வெளியே நீட்டினபடியே பின்னங்காலில் நின்று, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை உரிமைகோரும்படியே வாஞ்சிக்கிறேன், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் (எபி. 13:8), அவருடைய வல்லமை ஒரு போதும் நின்று போகவில்லை, அவர் ஒருபோதும் தவறிப்போக மாட்டார். அவர் எல்லாவிதத்திலும் மாறாதவராயிருக்கிறார். ஆமென். 100. நான் அவரை நேசிக்கிறேன், நீங்களும் அவரை நேசிக்கும்படி நான் விரும்புகிறேன். நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பூரண அன்பு எல்லா பயத்தையும் புறம்பே தள்ளும். நீங்கள் அவரை சரியான விதமான இருதயத்தோடு நேசிப்பீர்களானால், நீங்கள் அவருடைய வார்த்தையைக் காத்துக் கொள்வீர்களா இல்லையா என்று ஒரு துளி பயமும் உங்களுக்கு இருக்காது. 101. தொடர்ந்து ஒவ்வொரு இரவும், உலகம் முழுவதிலுமுள்ள முழு மொத்தமான ஆயிரக் கணக்கான ஜனங்கள் முன்பாக மேடையின் மேல் நின்று கொண்டிருக்கிறேன், குற்றம் கண்டு பிடிக்கிறவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டு, ‘அது இது, அது, மற்றது’ என்று கூறுவார்கள். மந்திரவாதிகள் அங்கே நின்று கொண்டு மந்திர வார்த்தைகளை உங்கள் மேல் வீசி எறிய முயற்சித்துக் கொண்டிருந்து, அவ்விதமாக சண்டையிடவும் காரியங்களைச் செய்யவும் உங்களுக்கு சவால் விடுவார்கள், தேவனுடைய கிருபையால் நான் கூறுகிறேன், என்னுடைய இருதயத்தில் ஒருமுறை கூட ஒரு துளி பயமும் ஒரு போதும் வந்ததேயில்லை. ஒரு முறையும் பயமே வந்ததில்லை. ஏன்-? அவர் என்னைக் குறித்துப் பொறுப்பெடுத்துக் கொள்வதாக கூறினார், நான் அவரை விசுவாசிக்கிறேன். அது தான் காரணம். நான் பயப்படுவேனானால், நான் அங்கிருந்து வேகமாகச் சென்று விடுவேன். 102. ஆனால் நான் உங்களுக்குக் கூறுகிறேன், இயேசு கிறிஸ்து உங்களை அபிஷேகிக்கும் போது, நீங்கள் ஓடிக் கொண்டிருக்கிற பொருளால் உண்டாக்கப்பட்டவர்கள் அல்ல. அவ்வளவு தான். ஜிப்ரால்டர் கன்மலையல்ல (Rock of Gibraltar), ஆனால் காலங்கள் தோறும் இருக்கிற கன்மலை (Rock of Ages)... நீங்கள் காலங்கள் தோறும் இருக்கிற கன்மலையின் மேல் ஏறி (அது தான் தேவனுடைய வார்த்தை), பாதாளத்தின் வாசல்கள் அதற்கு விரோதமாக யுத்தம் பண்ணும் போது, இந்த பரிபூரண நம்பிக்கையோடு அங்கே உங்கள் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, நிற்கிறீர்கள்: அதை வாக்குப் பண்ணினவர் தவறுவதில்லை, அவர் ஒரு போதும் தவறிப் போவதில்லை. ஆமென். அது தான் விசுவாசம். அப்போது தான் நீங்கள் பயப்படுவதில்லை. 103. எப்படியும், பிசாசு ஒரு வெற்று வேட்டேயன்றி (வெற்று வீம்பு பேசுபவன் – bluff-- மொழி பெயர்ப்பாளர்.) வேறல்ல. அவன் கோபத்தாலும் வெறுப்பாலும் சீறுவான், கோபங்கொள்வான், எல்லா இடிகளும் உண்டு, ஆனால் மின்னல் கிடையாது. ஆனால் சகோதரனே, நான் உங்களுக்குக் கூறுகிறேன், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மின்னல் வல்லமை ஆனது அங்கே ஒரு உண்மையான ஒன்றை வைக்கிறது, அது ஆத்துமாவை இந்த பூமிக்குரிய காரியங்களின் மரண நித்திரையிலிருந்து, தேவனை விசுவாசித்து, அவரை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொண்டு, இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல அழைக்கும் படியான, அழிவில்லாத மண்டலங்களுக்குள் கொண்டு செல்லும் அதிர்ச்சி அனுபவத்தைக் கொடுக்கிறது. ஆமென். 104. ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு, வெளியே அழைக்கப்பட்டு, ஒரு நோக்கத்துக்காக தனியே ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். அது கிரயத்துக்குக் கொள்ளப்பட்டு, கழுவப்பட்டு, குறைகள் அகற்றப்பட்டு, கறைதிரையற்ற ஒரு சபை. அந்த சபைக்காகத்தான் அவர் வருகிறார். இன்றிரவு நம்முடைய விசுவாசம் சரியான நிலையை அடைந்து, அங்கே உள்ள அந்தப் யுத்த களங்களுக்குச் சென்று, ‘சாத்தானே, நீ ஒரு பொய்யன். என்னை விடுதலையாக்கும்படியாக இயேசு கிறிஸ்து மரித்திருக்கிறார், அது என்னுடையது. இங்கிருந்து வெளியே போ’ என்று கூறும்படிக்கு தேவன் நமக்கு ஒத்தாசை புரிவாராக. 105. சரியான ஜனங்களாகிய நீங்கள், இன்றிரவு உங்கள் வீட்டிற்குப் போகும் போது, அங்கே வீட்டினுள்ளே ஒரு கூட்டம் குடிகாரர்கள் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டும், கவனத்தை ஈர்த்துக் கொண்டும், புகைபிடித்துக் கொண்டும், மது அருந்திக்கொண்டும், சபித்துக் கொண்டும், ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டும், இருந்தால், நீங்கள், ‘ஏய், இங்கிருந்து வெளியே போ. இது என்னுடைய வீடு’ என்று சொல்லுவீர்கள். அவன், ‘நான் ஒரு மனிதன். இது மனிதர்களுக்காகக் கட்டப்பட்டது, எனக்கு இங்கே உரிமை உண்டு’ என்று கூறுகிறான். நீங்களோ, ‘இது என்னுடைய வீடு. இது என்னுடைய சொத்து என்று நிரூபிக்க என்னிடம் அசலான பத்திரம் (abstract deed) உள்ளது’ என்று கூறுவீர்கள். அப்போது நீங்கள் அந்த பத்திரத்தை அவனுக்குக் காண்பித்தும், அவன் அங்கிருந்து வெளியே போகாமலிருந்தால், அவனை அங்கிருந்து போகச் செய்ய இங்கே ஒரு சட்டம் இருக்கிறது. 106. இன்றிரவு அந்தப் பிசாசு உங்களிடம் வந்து, உங்களை அகால மரணத்தினால் கல்லறைக்கு அனுப்பவோ, உங்களை முடமாக்கிப் போடவோ முயற்சித்தால், தேவனுக்கு சொந்தமான அசலான பத்திரத்தை வாசித்துக் காட்டுங்கள், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். அவன் அதை நம்ப விரும்பவில்லை என்றால், இங்கே ஒரு பரிசுத்த ஆவியானவர் உண்டு, அவனை உதைத்து வெளியே தள்ளும்படியாக, அதை நிரூபிக்கும் தேவனுடைய சட்டம் உண்டு. வெறுமனே, ‘இயேசுவே, முதன்மையும் முக்கியமுமான இ-யே-சுவே’ என்று அழையுங்கள். ஏதோவொன்று சம்பவிக்கவில்லையா என்று கண்டறியுங்கள். தேவ தூதர்கள் தங்கள் ஸ்தானத்தை எடுத்துக் கொள்வார்கள், அந்தப் பிசாசு வெளியே போய் விடுவான். நீங்கள் அங்கே விழிப்போடு நின்று கொண்டு, ‘ஆம், ஐயா. அது சத்தியம்’ என்று கூறுவீர்கள். ஆமென். இங்கே மேலே அல்ல. இங்கே கீழே தான். நீங்கள் உங்களுடைய உரிமையை தெளிவாக வாசித்திருக்கிறீர்கள். அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். 107. ஓ, என்னே-! சிறிது நேரம் செட்டைகளை அடித்து பறக்க வேண்டும் என்பது போல் உணருகிறேன், நீங்கள் அதைக் குறித்து சிந்திக்கும் போது, நீங்கள் அவ்வாறு உணரவில்லையா-? நிழல்களுக்கு மேலாக என்னை உயர்த்தி வையும், தெய்வீக ஐக்கியத்தை எனக்குத் தாரும். ஆம், ஐயா. அங்கேயே எழும்புங்கள், அங்கே எல்லா காரியங்களும் கைகூடும். 108. ஏனோக்கு உயர எழும்பின அந்த இடத்திலேயே எழும்புங்கள். என்னே, ஒரு பிற்பகல் வேளையில் அவன் தேவனோடு கொஞ்சம் உலாவச் சென்ற போது, அவன் அவரோடு வீட்டை நோக்கி நடந்து சென்றான். அவனுக்கு திரும்பி வர கொஞ்சமும் விருப்பமில்லை. அல்லேலூயா-! அது ஒரு காலை வேளை அல்ல; அது சாயங்கால நேரமாயிருந்தது... ஆமென். எடுத்துக் கொள்ளப்படுதல், உயிர்த்தெழுதல்... அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்ற சாட்சியைக் கொண்டு இருந்தான், காரணம் அவன் தேவனை விசுவாசித்தான். ஆமென். அது தான் நமக்குத் தேவையாயுள்ளது. அதைத்தான் நாம் வாஞ்சிக்கிறோம். அதைத் தான் நாம் கொண்டிருக்கிறோம், ஆனால் அதை உபயோகிக்க நீங்கள் பயப்படுகிறீர்கள். ஆமென். 109. என்ன நன்மை பயக்கும் - யாரோ ஒருவர் என்னுடைய மகனிடம் கொடுத்து... இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, தேவனுக்குச் சித்தமானால், நாங்கள் விடுமுறையை கழிக்கும்படி, மேலே மலைகளுக்கு வேட்டையாட போகிறோம். அம்மனிதன் அவருக்கு ஒரு துப்பாக்கியைக் கொடுத்து, அவர் அதை உபயோகிக்கப் போவதில்லை என்றால், அது என்ன நன்மை பயக்கும்-? அது அங்கே இருக்கிறது, அது அருமையான துப்பாக்கி தான், ஆனால் அவர் அதை உபயோகிக்கா விட்டால், அது ஒரு போதும் எந்த நன்மையும் செய்யாது. அந்த விதமாகத் தான் உங்கள் விசுவாசமும் உள்ளது. ஓ, அது ஒரு அருமையான விசுவாசம். நீங்கள் வாசித்து, அதை விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் தேவனோடு ஒரு அனுபவத்தைக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். ஆமாம், ஆனால் என்ன நன்மை பயக்கும்... கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது. அதை கிரியை செய்ய வையுங்கள். சோம்பலாக இருக்காதீர்கள்; புறப்பட்டு செல்லுங்கள். என்னே-! வெளியே கூட்டத்தினரில் சம்பவித்துக் கொண்டிருக்கிற காரியங்களை நான் - நான் - நான் அப்படியே பார்க்கிறேன். நான் அதிலிருந்து விலகியிருக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன், அப்போது நாம் ஜெப வரிசையைத் துவங்க முடியும். நான்... ஆனால் என்னால் முடியவில்லை. அது அப்படியே தொடர்ந்து என் மேல் அசைவாடிக் கொண்டு இருக்கிறது. அல்லேலூயா. 110. அந்தக் காரியங்களைக் குறித்து பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்த அவசியமில்லை. அது சரியே. நாம் அவரை விசுவாசிப்போம். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசியுங்கள். இன்றிரவு அங்கே கூட்டத்தினரில் உட்கார்ந்திருக்கும் ஜனங்களே, நான் இன்றிரவு இங்கே வந்து, ஜெப அட்டைகள் இல்லாமலும், ஜெபிக்காமலும் வெறுமனே அவர்களை மேலே கொண்டு வந்து, வியாதியஸ்தருக்காக ஜெபிக்க முயற்சிக்கும் நேரத்தில், இது ஒரு வல்லமையான அபிஷேகமாயுள்ளது, அவர்கள் இந்த வழியாகக் கடந்து செல்லும் போது, அவர்களுக்காக ஜெபிக்கிறேன், தேவன் என் மேல் இரட்டிப்பான பங்கை ஊற்றி இருப்பது போன்று தோன்றுகிறது, என்னால் சற்றும் அதிலிருந்து... விலகியிருக்க முடியவில்லை. என்னால் ஒரு ஜெப வரிசையை அழைக்க முடியாது. அது அப்படியே எல்லா இடங்களிலும் அசைவாடிக் கொண்டிருக்கிறது. உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவில் நான் உங்கள் விசுவாசத்திற்கு சவால் விடுகிறேன். அது சரியே. நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். 111. அங்கே கரத்தை மேலே உயர்த்தியிருக்கிற சீமாட்டியே. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? இங்கே நின்று கொண்டிருக்கிற உங்களுக்குள்ள கோளாறு என்னவென்று நான் அறியும்படி இயேசு கிறிஸ்து அனுமதிப்பாரானால், நீங்கள் உங்கள் சுகத்தை ஏற்றுக் கொள்வீர்களா-? நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா-? உங்களில் மற்றவர்களும் அதை ஏற்றுக் கொள்வீர்களா-? மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிற அது சரியென்று விசுவாசிக்கிறீர்களா-? இது என்னவாக இருக்கிறது-? இதுதான் விசுவாசம். அது என்னவாக இருந்தது-? அவர், ‘நான் உன்னோடு இருப்பேன்’ என்று கூறியுள்ளார். நான் அவரை விசுவாசிக்கிறேன். அது சரியே. நீங்கள் அதை விசுவாசித்தால், உங்கள் தொப்புளில் உங்களுக்கிருக்கிற குடற்சரிவு இன்றிரவே குணமாகி விடும். அது தான் உங்களுக்கு இருக்கிறது, இல்லையா-? அதுவே தான் என்றால், உங்கள் கரத்தை அசைத்துக் காட்டுங்கள். சரி. நீங்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் கேட்டதைப் பெற்றுக் கொள்ள முடியும். அல்லேலூயா-! தேவனை விசுவாசியுங்கள். எல்லாம் கைகூடும். தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள். ஓ, அவர் அற்புதர் அல்லவா-? இயேசு, ‘நீங்கள் விசுவாசிப்பீர்களானால், என்னால் கூடும்’ என்றார். முதலாவது, நீங்கள் விசுவாசித்தாக வேண்டும். 112. அங்கே வரிசையின் கடைசியில் உட்கார்ந்து கொண்டு, இந்த வழியாகப் பார்த்துக் கொண்டு, உமது கரத்தை மேலே உயர்த்திக் கொண்டிருக்கும் ஐயா, சைனஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டு, முதலாவது இருக்கும் சிறிய வரிசையில் இந்த விதமாக பார்த்துக் கொண்டிருப்பவரே. தேவன் உம்மை சுகமாக்குவார் என்று நீர் விசுவாசிக்கிறீரா-? சரியாக அங்கேயிருப்பவர்... அந்த...-?... அங்கே உங்களுக்கு அடுத்ததாக உட்கார்ந்து கொண்டிருக்கும் நபர். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, அப்படி செய்வீர்களா-? சீமாட்டியே, நீங்கள் விசுவாசித்தால், எழுந்து நில்லுங்கள். அது சரியே. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆமென். அதுதான் காரியம். 113. இங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டு – தன்னுடைய கரங்களை இவ்விதமாக குறுக்காக வைத்துக் கொண்டு, அங்கே பின்னால் அமர்ந்திருக்கிற சீமாட்டியே, உன்னுடைய முதுகில் கோளாறு உள்ளது, இல்லையா சீமாட்டியே, மேலும் அது என்வென்றே தெரியாது. அது உண்மை அல்லவா-? அங்கே பின்னால் பெஞ்சின் கடைசியில் உட்கார்ந்திருப்பவர் தான். அது உண்மை என்றால், எழுந்து நில்லுங்கள். அங்கே பின்னால் வழியில்... அது சரியே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே அந்த பெண்மணியின் அருகில் தேவனுடைய தூதன் நின்று கொண்டிருக்கிறார். உன்னுடைய முதுகில் உனக்கு ஏதோ கோளாறு உள்ளது, அது என்னவென்று உனக்குத் தெரியாது. அது சரியல்லவா-? அது சரியென்றால், உன் கரத்தை உயர்த்து. நான் ஒரு காரியத்தை உன்னிடம் கூற முடியும்: அது இப்பொழுது உன்னை விட்டுப் போய் விட்டது. நீ இப்பொழுது அதை உணரவில்லை. அது சரியென்றால், உன் கரத்தை முன்னும் பின்னும் உயர்த்து. அங்கே தான் அது இருக்கிறது. அதுவெல்லாம் போய் விட்டன. பாருங்கள், அது அந்த பெண்மணியைச் சுற்றிலும் வெளிச்சமாக மாறி விட்டது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்-! விசுவாசம், அதை விசுவாசியுங்கள்-! ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவனே... 114. சீமாட்டியே, அதற்கும் சிறிது கழிந்து நீ அப்படியே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டாய். உனக்கு அடுத்ததாக உட்கார்ந்து கொண்டிருக்கிற சீமாட்டிக்கு நரம்பு சம்பந்தமான கோளாறு உள்ளது. அவர்கள் தம்முடைய கரங்களை உயர்த்தி இருக்கிறார்கள். சீமாட்டியே, ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்கள். அங்கே உங்களுக்கு அடுத்ததாக உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்கள் தான்... சரி. இப்பொழுது, நீங்களும் கூட வீட்டிற்குப் போகலாம். உங்களுடைய நரம்புக் கோளாறு சரியாகி விட்டது. இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கி விட்டார். உங்களுடைய விசுவாசம் உங்களை சுகமாக்கிற்று. அல்லேலூயா-! 115. அல்லேலூயா-! இன்றிரவு அங்கே மேலே பால்கனியில் இருப்பவர்களைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்-? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிக்கிறீர்களா-? விசுவாசியுங்கள். ஓ, அல்லேலூயா-! ஒருக்கால் நீங்களும் கூட என்னை ஒரு பரிசுத்த உருளையன் என்று அழைக்கலாம்...-?...; அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுவதில்லை. நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன். நான் அறிவேன்-? தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து, சபைக்கான யாத்திரை (the Exodus for the Church), எல்லா காலங்களுக்கான மீட்பர் இப்போது இங்கே பிரசன்னமாயிருந்து, அவர் இங்கே பூமியில் இருந்த போது காண்பித்த அதே காரியத்தை காண்பித்துக் கொண்டிருக்கிறார். தேவனுக்கு மகிமை-! நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா-? உங்களுக்கு விசுவாசம் இருந்தால், நீங்கள் விரும்புகிற எதையும் பெற்றுக் கொள்ள முடியும். உங்களுக்கு விசுவாசம் இல்லை என்றால், உங்களால் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. 116. ஐயா, அங்கே அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் உங்களைக் குறித்து என்ன-? சக்கர நாற்காலி, கட்டில், அது என்னவாக இருந்தாலும். இயேசு கிறிஸ்து உங்களுக்காக மரித்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நான் உங்களை அறியேன், உங்களை ஒரு போதும் கண்டதே இல்லை. உம்மிடம் ஜெப அட்டை உள்ளதா-? உம்மிடம் இல்லையா-? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீர் விசுவாசிக்கிறீரா-? நீர் அதே காரியத்தை ஏற்றுக் கொள்வீரா-? நீர் அங்கே காச நோயைக் கொண்டவராய் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர், இல்லையா, ஐயா-? அது உண்மை. பட்டணத்திற்கு வெளியிலிருந்து நீர் வந்திருக்கிறீர், இல்லையா-? புளூமிங்டனைச் சுற்றி, இல்லினாயிஸிலிருந்து நீர் வந்திருக்கிறீர், இல்லையா-? அது உண்மை. 117. அங்கே உங்களுக்குப் பின்னால் வேறொரு சீமாட்டி உட்கார்ந்திருக்கிறார்கள், அங்கே பின்னால் உட்கார்ந்திருக்கிறார்கள், அவர்களுக்கு விழுந்து போன சிறுநீரகம் (fallen kidney) இருக்கிறது. சரியாக... உட்கார்ந்திருப்பவர்கள். அவர்களும் அதே பட்டணத்திலிருந்து தான் வந்திருக்கிறார்கள். அவர்களும் அதே இடத்திலிருந்து தான் வந்திருக்கிறார்கள். ஒரு விழுந்து போன சிறுநீரகம்.... அவர்களுடைய கண்ணில் தொற்று நோய் உள்ளது. அது உண்மை. அங்கே பின்னால் இருக்கையின் கடைசியில் உட்கார்ந்திருப்பவர்கள். மூக்கு கண்ணாடிகள் அணிந்து கொண்டிருக்கும் ஒருவிதமான தலை நரைத்த சீமாட்டி. நீங்கள் எல்லாருமே...-?... புளூமிங்டன் (Bloomington) என்று அழைக்கப்படும் ஒரே இடத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று காண்கிறேன். அது உண்மை, சீமாட்டியே. கண்ணாடிகள் அணிந்து கொண்டு அங்கே பின்னால் இருக்கும் நீங்கள், உங்களுடைய காலூன்றி எழுந்து நில்லுங்கள். நீங்களும் கூட புளூமிங்டனிலிருந்து தான் வருகிறீர்கள். உங்களுக்கு ஜெப அட்டை கிடைக்கவில்லை, அப்படித் தானே. உங்களிடம் எந்த ஜெப அட்டையும் இல்லை. சரி. நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சரி, ஐயா. அந்த சக்கர நாற்காலியிலிருந்து எழும்புங்கள். சகோதரியே, எழும்பு, வீட்டிற்குத் திரும்பிச் சென்று சுகமடைவாயாக. அல்லேலூயா-! தேவனை விசுவாசியுங்கள். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பினால், தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். (அப்பொழுது) நீங்கள் கேட்பதைப் பெற்றுக் கொள்ள முடியும். 118. சரியாக இங்கே உட்கார்ந்திருக்கிற ஒரு கறுப்பு நிற பெண்மணியின் மேல் பரிசுத்த ஆவியானவர் நின்று கொண்டிருக்கிறார். அவர்கள் இங்கே பின்னால் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கட்டி உள்ளது, அவர்களுக்கு கண்ணிலும் கோளாறு உள்ளது. அவர்கள் கரத்தை மேலே தூக்கி என்னைப் பார்த்து கரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையா, சீமாட்டியே. உங்களுடைய காலூன்றி நில்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். அல்லேலூயா-! 119. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார், அரசாளுகிறார். அவர் இங்கே இருக்கிறார். அவர் வியாதியிலிருந்து ஆரோக்கியத்துக்குப் போகும் உங்களுடைய யாத்திரையாக (Exodus) இருக்கிறார். சக்கர நாற்காலியிலிருந்து மீண்டும் நடப்பதற்கு செல்லும் உங்களுடைய யாத்திரையாக (Exodus) அவர் இருக்கிறார். புற்று நோயிலிருந்து ஆரோக்கியத்துக்கு போகும் உங்களுடைய யாத்திரையாக அவர் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன். உங்கள் காலூன்றி எழுந்து நின்று, அதை உரிமை கோருங்கள், அதை விசுவாசிக்க போதுமான விசுவாசம் உங்களுக்கிருந்தால், தேவன் இப்பொழுதே அதை உங்களுக்குக் கொடுப்பார். 120. தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் ஒவ்வொரு பிசாசையும், இங்கே உள்ளே இருக்கிற ஒவ்வொரு சந்தேகத்தையும் கடிந்து கொள்கிறேன். பரிசுத்தாவியானவர் இக்கட்டிடத்தில் அசைவாடி, இந்த பழைய அவிசுவாசத்தை தகர்த்தெறிந்து, இயேசு கிறிஸ்துவின்...-?... ஒவ்வொருவரையும் சுகமாக்குவாராக. *******